பக்கம்:பாற்கடல்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

லா. ச. ராமாமிருதம்


இல்லை!“ என்று அவரை நான் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கையில் இலை மேல் ஈ ஓட்டக் கையை ஆட்டும் நிலை நெருங்கிக் கொண்டிருக்கையில்.

“எங்கே போய்த் தொலைந்தாய்?“ அவர் எரிந்து விழுந்தார்.

மாமி கையோடு தான் கொணர்ந்திருந்த சின்னக் கிண்ணியிலிருந்து என் இலையில் மட்டும் ஓரமாய் எதையோ பரிமாறினாள். ஊறுகாய்.

“பண்டங்கள் எல்லாம் ஆறிப்போகிறது, ஊறுகாய்க்கு என்ன அவசரம்? எங்கே தொலைஞ்சே?”

“அப்படியில்லே, நாலு ப்ளாக் தாண்டி, ஒரு மாஸமா திருச்சினாப்பள்ளிக்காரர் குடித்தனம் வந்திருக்கா. இன்னிக்குச் சாயந்திரம் இவரைப் பார்க்க வராராம். இவருக்காகச் சீமை ஊறுகாய் மெனக்கெட்டு அவாளிடம் கேட்டு வாங்கி வந்தேன். இவர் ஒரு கதையில் எழுதியிருக்கார்; கசப்பு நார்த்தங்காய் கல்லையே ஜீரணம் பண்ணிவிடுமாம்; ஆனால் தன்னை ஜீரணம் பண்ணிக்கத் தெரியாதாம்! அது நெணைப்பு வந்தது.“

இலைமேல் என் முகம் குனிந்துவிட்டது. இரண்டு சொட்டுக்கள் சர்க்கரைப் பொங்கல்மேல் விழுந்ததை மாமா, மாமி, குழந்தைகள் எல்லோருமே பார்த்து விட்டார்கள். நான் என்ன செய்ய முடியும்? என்ன செய்யனும்? கண்ணீரில் புனித நீராடினேன்.

பெண்ணினத்துக்கே உரித்தான தாய்மையின் பரிவில் 2000 மைல்களை ஒரு கணத்தில் கடக்க வைத்துச் சென்னையில் அசோக் நகர், பெருமாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/202&oldid=1534305" இலிருந்து மீள்விக்கப்பட்டது