பக்கம்:பாற்கடல்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

லா. ச. ராமாமிருதம்


ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில், மாலை வேளைகளில் லால்பாக் மைதானத்தில் மிலிட்டரி பாரேட் - இல்லாட்டா மிலிட்டரி band - ரொம்ப நன்னாயிருக்கும் ஆத்துக்குத் திரும்பி வந்ததும் மோருஞ் சாதத்தைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால், அவ்வளவு தான்.

எங்கேயாவது கதா காலக்ஷேபம் இருந்தால் போவோம். சங்கீத உபன்யாசத்துக்கு அப்போ ஒரு தனி மவுசு. ஸரஸ்வதிபாயை அப்போ கேட்டிருக்கேன். அப்பத்தான் தைரியமா மேடை ஏறின புதுசு. அவா ஜாதிக் கட்டுக் கட்டிண்டு, மூக்கில் புல்லாக்கு - மங்களகரமாக இருப்பாள். அந்த திரெளபதி சபையில், தனக்கு நியாயம் கேட்கிற இடத்தைப் பாட்டும் வசனமுமா அள்ளி வீசி. ரொம்ப நன்னாயிருக்கும். அடேயப்பா! கண்ணில் திரெளபதியே வந்துவிடுவாள்.

அம்மா இந்த அளவுக்கு ஒரு விஷயத்தை வாய் விட்டுப் புகழறாள்னா, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.

அம்மாவுக்குக் கொட்டி அளக்கற சுபாவம் கிடையாது. எடை போடுவதோடு சரி.

காய்கறிகள் இங்கே கொஞ்சம் தைரியமா நடமாடும். கோஸ், உருளை.

அம்மா குடும்பத்தின் சந்தோஷங்கள் இவை.

'நாளைக்குச் சோறு வடியல் எப்படி?’ என்கிற கவலை விட்ட நாட்கள். 'சந்தோஷம் என்று தனியா என்னடா இருக்கு? மனம் நிறைஞ்சுவிட்டால் அதை விட என்ன வேணும்? யாருக்கேனும் அப்படியிருக்கோ நெஞ்சைத் தொட்டு, அவாள் வாதங்களையே கேட்டுக்க வேண்டியதுதான். அல்ப விஷயம் சொல்ப விஷயத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/208&oldid=1534311" இலிருந்து மீள்விக்கப்பட்டது