பக்கம்:பாற்கடல்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

203


மனம் நிரம்பி வழியறதே, இன்றைக்கு இது கிடைச்சதே இதுவே திருப்தி; இதுதான் சந்தோஷம். சந்தோஷத்தில் மனச்சாக்ஷிக்குப் பங்கு உண்டு.“

லால்குடிக்கு அப்புறம் இங்கேயும் எனக்கு முன்னால் இரண்டு சிசுக்கள் நிறையும் குறையுமாகக் காலாவதி ஆகிவிட்டன. பெரியவர்கள் சொற்படி அம்மாவும் அண்ணாவும் ராமேஸ்வரம் போய்வந்தார்கள். வீட்டில் திலோமம் நடந்தது. அம்மா கடும் விரதங்கள் இருந்தாள்.

பிறகு –

நள வருடம் ஐப்பசி ௴ 14 ௳க்குச் சரியான 30-10-1916 அன்று காலை 9-15 மணிக்கு பெங்களூரில் அடியேன் ஜனனமானேன்.

ஆகவே வரலாற்றுக்குள் ஒருவழியாக - உருப்படியாக சரித்திர ரீதியாக நுழைந்துவிட்டேன். ஆனால் பிறக்கும்போது நான் உருப்படியாகப் பிறக்கவில்லை. அங்கஹரீனம் இல்லை. வாஸ்தவந்தான். ஆனால் உடம்பு பூரா நீலம் பாரித்துக் கட்டையாக விழுந்தேனாம். பிறகு டாக்டரோ, மருத்துவச்சியோ - எனக்குத் தெரியாது - குழந்தையைத் தலைகீழாகப் பிடித்துச் சப்பையில் இரண்டு அறை அறைந்த பிறகுதான் அழுகை புறப்பட்டதாம். அதுவும் திருப்தியாக இல்லை. பூனைக்குட்டி போல் ஏதோ முனகல், தவம் கிடந்து பெற்ற குழந்தைக்குச் சீட்டு உறுதியாகவில்லை. யார் சொல்லியோ, கழுதைப்பாலை ஒரு பாலாடை புகட்டிய பிறகுதான் கழுதைப்பால் - நெருப்பு. - உடல் நீலம் மறையத் தொடங்கி நானும் ஜன்னியிலிருந்து மீட்கப்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/209&oldid=1534312" இலிருந்து மீள்விக்கப்பட்டது