பக்கம்:பாற்கடல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

15


போடலாமா? சரியான வார்த்தை கிடைக்க நாள் கணக்காகக் காத்திருப்பேன். வார்த்தைகளின் ஓசையைச் செவியில் தட்டிப் பார்ப்பேன்” என்று ஒருகாலத்தில் நீங்கள் சொல்ல நாங்களும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த நாள் எல்லாம் மலையேறிப்போச்சும் வோய்!”

”அப்படியா?”

ஒரு சமயம் - ஒரு கதையில் ஒரு கட்டம். கதைப் பெயர் கணுக்கள் (அமுதசுரபி). வயிற்றில் பல், நாக்கு நுனியில் நாசூக்காய்ப் புரளும் சொல். இதற்கு ஒரு உவமையே கவனமாக அன்றிரவு கண்ணயர்ந்து விட்டபின் ஒரு கனா. அல்ல, தோற்றம். ஒரு பாழும் சுவரில் ஒரு கரிக்கட்டி எழுதுகிறது:

’மாம்பூவைக் காம்பு ஆய்ந்தாற்போல்’

நான் தேடிய உவமை.

அது ஒரு காலம்.

இது ’ஜெட் ஏஜ்’. அப்படியானால் டைப்ரைட்டருடைய காதலையும் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/21&oldid=1532911" இலிருந்து மீள்விக்கப்பட்டது