பக்கம்:பாற்கடல்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

லா. ச. ராமாமிருதம்


சுபாவம் கிடையாது. அனுபவத்தில் அதுதான் எனக்குத் தெரியும்.

கிராப்பு வேறு வெட்டிவிட்டதும் கப்பலிலிருந்து இறங்கிய பரங்கி (Feranghi)க் குழந்தை போலாகி விட்டேன். முகவார்ப்பும் அப்படித்தான்.

இவையெல்லாம் தற்பெருமையாகப்படின், வாசகர்கள் பொறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. என் கூச்சத்தைப் பற்றி இங்கு தெரிவித்துக் கொள்வதில் என்ன பயன்? சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது! பிறகு ஏழு எட்டிலிருந்து பதிமூன்று, பதினாலு வயதுவரை தேவாங்காய் (ஒரு சிறு கூனலையும் போட்டுக்கொண்டு) மாறிவிட்டேனே, அதுபற்றி இவ்வளவு விவரமாகச் சொல்லப் போறேனா? சொன்னால்தான் உங்களுக்குப் பிடிக்குமா?

பத்து மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டேனாம். கலசத்தில் உற்பவித்த உடனேயே கையோடு பிறந்த கமண்டலத்துடன் தன் வழியைத் தேடிக்கொண்டு புறப்பட்டுவிட்ட சுகப்ரம்மம் ஆகிவிட்டேன் என்று சொல்ல வரவில்லை. சொல்லக் கேட்டதைச் சொல்லுகிறேன்.

எனக்கு இரண்டு வருடங்கள் கழித்துச் சிவப்பிரகாசம் பிறந்தான். ஆனால் அவன் என் பருமன் இல்லை.

இப்போது காலம், விளம்பரத்துக்கு, அப்போது இப்போது போலிருந்தால் Mothers Food Baby. Glaxo Baby, Farex Baby என்று பத்திரிகைகளிலும், சினிமாவில் விளம்பரத் துண்டுகளிலும் பார்க்கிறோம். அதுபோல, Mother's Milk Baby என்று விளம்பரத்துக்கு இணங்கியிருந்தால், என் பெற்றோர்கள் உருப்படியாகக் கொஞ்ச-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/212&oldid=1534315" இலிருந்து மீள்விக்கப்பட்டது