பக்கம்:பாற்கடல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

லா. ச. ராமாமிருதம்


முறையில் காண முடிந்தது என்றே சொல்லிக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தில் Double event என்று ஒரு பிரயோகம் உண்டு - இரட்டைப் பிறவியைத் தெரிவிப்பதற்கு. ஆனால் இந்தக் குடும்பத்தில் அது இரட்டைச் சாவு எனத்தான் பொருள் கண்டது. ஏதோ குடும்பச் சாபம் போல், அவை அடுத்தடுத்தோ அல்லது நெருக்கத்திலோ நேரும். ஏதோ முறையில் விதியால் தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களாகி விட்டோம். உடனே இங்கே, இவ்வரலாற்றில் இடம் கண்டுகொள்ளட்டும்.

“லா.ச.ரா.வின் எழுத்தில் எப்பவும் சாவின் நிழல் ஆடிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.“ இப்படி ஒரு விமரிசனம்.

ஏன் இராது? எனக்கு அறியாத வயதிலிருந்தே சுந்தரம் - சுப்ரமணியன் சாவில் ஆரம்பித்த தொடர்பு.

“ரெயில் விபத்து, கொள்ளைக் கூட்டத்தாரால் சுட்டுக் கொலை, புயல், தீ, அங்கே உள்நாட்டுக் கலகம், இங்கே assassination, அதோ கொரியா என்று whole sale கனக்கில் வாரிக்கொண்டு போகையில், உயிரே மலிவாகிவிட்ட இந்நாளில், தனிச் சாவுக்கு என்ன பூச்சூட்டல்? இதெல்லாம் இலக்கியம் பண்ணுகிறோம் என்று ஒரு பம்மாத்து. எங்களைத் தங்களோடு எப்பவும் இருத்தி வைத்துக்கொள்ள ஒரு பயமுறுத்தல். இதற்கெல்லாம் நாங்கள் மசிந்துவிடுவோமா? போகிறவாளைத் தடுக்க முடியுமா? இதோ நான் வெளியே போகிறேன். உயிருடனோ, உருப்படியாகவோ திரும்பி வருகிறேன் என்பது என்ன நிச்சயம்? உங்களுக்கு நாளை என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/222&oldid=1534323" இலிருந்து மீள்விக்கப்பட்டது