பக்கம்:பாற்கடல்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

லா. ச. ராமாமிருதம்


இன்றியமையாத பக்கவாத்தியக்காரர். சித்திரங்கள் இல்லாமல் பத்திரிகையில்லை என்கிற நிலை வெகு நாட்களாக இருந்து வருகிறது. அதுவும் இப்போது சித்திரங்களின் ஆதிக்கம் முன்னிலும் ஓங்கி, அதில் விதவிதமான பாணிகள், விஷயத்துக்கேற்ற சித்திரக்காரர், சித்திரக்காரருக்கேற்ற விஷயம் என்கிற மாதிரியெல்லாம் வளர்ந்து, நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற நிலையில் இருக்கிறது. வியாபார ரீதியில், விஷயத்தைக் காட்டிலும் சித்திரங்களின் இடம் இப்போது கெட்டி. இந்த நிலைமையில் என் தனி அபிப்பிராயம் அதிகப்பிரசங்கம். அவசியமற்றது, எந்தச் சமயத்திலும் அது முக்கியமும் இல்லை.

எழுத்தைப் படிக்கையில், வரிகளுக்கிடையே, எழுதாத சொற்கள், வாசகனின் யூகத்துக்கு எப்படி ஒளிந்திருக்கின்றனவோ, அதேபோல் சித்திரத்தில் வரையாத கோடுகளுக்குள் காட்டாத மேனி காத்துக்கொண்டிருக்கிறது என்பது என் துணிபு. ஆகவே இரண்டும் இணைந்த கலவையில், சித்திரக்காரரின் ஒத்துழைப்புடன் புதுமையாக ஏதேனும் செய்வதோடல்லாமல் என் எழுத்தின் (அழுத்தம் உச்சரிப்பு - 'என்') வீச்சை எப்படி அதிகப்படுத்திக்கொள்வது என்பதுதான் என் குறி எழுதாத வார்த்தைகளையும் காட்டாத மேனியையும் தேடுவோனின் ஆர்வத்தையும் தூண்டும்படி இருத்தல் வேண்டும். சித்திரமும் செந்தமிழும் இணைந்து இழைக்கும் ரஸவாதம் ஓவியனுக்கும் எழுத்தாளனுககுமிடையே ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் ஒருமைப்பாடு, குறிப்பறிந்துகொள்ளும் தன்மை, கொஞ்சம் கூடுவிட்டுக் கூடு பாயும் சித்து, எல்லாமே தேவை. இந்த எதிர்பார்ப்பு அதிகப்படிதான். எல்லாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/224&oldid=1534325" இலிருந்து மீள்விக்கப்பட்டது