பக்கம்:பாற்கடல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

17


கேணியில் ஜாகை, ஒருநாள் ஓர் அழகிய வாலிபர் வீட்டுக்கு வந்து, “என் பெயர் லக்ஷமணன். நேஷனல் கேர்ல்ஸ் ஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்க்கிறேன். ராஜன் எலக்ட்ரிக் பிரஸ் முதலாளியின் ஆதரவிலும் உற்சாகத்திலும் ஒரு மாதப் பத்திரிகை தொடங்கவிருக்கிறோம். முதலிதழுக்கு உங்கள் கதை தேவை. சந்திரோதயத்தில் உங்கள் 'அபூர்வ ராகம்’ படித்தேன். ஆஹா!" —

பிறகு கண்டேன். வித்வான் வே. லக்ஷமணனுக்குத் தோற்றம் மட்டும் கவர்ச்சி அல்ல, அதனினும் வசீகரம் அவர் பேச்சு, குரல் வெல்வெட். ‘அடாடா’க்களும் 'ஆஹா'காரங்களும் அவர் சம்பாஷணையில் அள்ளித் தெளித்திருக்கும். அவரைவிடப் பல வருடங்கள் நான் மூத்தவன் என்றாலும் கைதட்டலுக்குக் காத்திருக்கும் நாட்கள்.

அப்போ என் எழுத்துக்கு ஒரு இக்கட்டான கட்டம், என்னைத் திட்டிக்கொண்டே என்னைப் படிக்கும் ஒரு வட்டம் உருவாகிக்கொண்டிருந்தது.

“என்னய்யா இந்த மனுசன், என்னத்தை எழுதறான்? என்னத்தைச் சொல்ல வரான் ? புரிய மாட்டேன்குது. புரியல்லியா விட்டுத் தொலைன்னு தூக்கி எறியவும் முடியல்லே. படிச்சு முடிச்சபின் வயித்தை என்னவோ சங்கடம் பண்ணுது. படிச்ச நினைப்பில் நாலுதரம் புரண்டாச்சு, ஆனால் தூக்கம் வரல்லே.”

இதுபோன்ற வசைமாரிக்கு ஆளாகிக் கொண்டிருந்தேன்.

"பிறருடைய போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் என் எழுத்து அப்பாற்பட்டது” என்று எழுத்தாளன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/23&oldid=1532913" இலிருந்து மீள்விக்கப்பட்டது