பக்கம்:பாற்கடல்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

லா. ச. ராமாமிருதம்


உன் தாத்தா தமிழ்ப்பண்டிதர்தானே, மூதாதையரை ஏன் இழுக்கிறாய்?" என்கிற கேள்வி, கேள்விக்கெனக் கேள்வியே அன்றிப் பொருத்தமற்றது. நான் குறிப்பது அந்தக்காலம். அந்தக் காலத்தின் கட்டாயம்.

பகைப்புலனுக்கு Background என்கிற அர்த்தம் கொள்ளுமா? அவ்வளவு மட்டுந்தானா? எனக்குத் தோன்றவில்லை. திருப்தி ஏற்படவில்லை. Backdrob, Canvas, திரைச்சீலை. நாடகமே உலகம். தெருக்கூத்து நாளில்கூடத் திரையில்லாமல் கூத்து நடக்காது. அந்தப் பக்கம், இந்தப்பக்கம் இரண்டுபேர் ஒரு துப்பட்டியைத் திரையாகப் பிடித்துக்கொண்டு நிற்க, பின்னாலிருந்து பாட்டுக் கிளம்பும். துரியோதன மஹாராஜன் வந்தானே!"

திரையைச் சடக்கென்று தாழ்த்தியவுடன், அல்லது இருவரில் ஒருவன் இழுத்துக்கொண்டவுடன், துரியோதன மஹாராஜன் வந்தானே! என்று துரியோதன மஹாராஜனே பாடிக்கொண்டு வேஷத்தின் அத்தனை சுமையுடன் பெஞ்சில் உட்கார்ந்தபடியே, வலிப்புக் கண்டமாதிரி, மேடையே கிடுகிடுக்க ஆடுவான்.

தருமராஜன் வந்தாலும் அதே கிடுகிடுப்புத்தான்.

அந்த நாளில் ஆனந்தவிகடனில் கர்நாடகத்தின் வர்ணனைக்கெதிரே நான் காரைப்பூச்சுகூடக் காண மாட்டேன்.

ஆனால் அன்றைய தெருக்கூத்து முதல் இன்றைய National Theatres நாடகத்துக்குக் கொணர்ந்திருக்கும் நகாசுவரை ஆதாரம் திரைத் துணிதான்.

திரையில்லையேல் 16 mm இலிருந்து 70 mm வரை, சினிமாவே கிடையாது. அந்தத் தொழிலே அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/238&oldid=1533318" இலிருந்து மீள்விக்கப்பட்டது