பக்கம்:பாற்கடல்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

235


எவனும் அவனவன் நாமம். அதாவது மேல் சொன்ன நாமம். அதுவே பாரம்பர்யம். பகைப்புலனிலிருந்து விடுபட முடியாது என்பது என் துணிவு.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்!’ எனும் வழக்கு தான்தோன்றித்தனத்துக்குத் தப்பட்டமல்ல. ஓர் இலை உதிர்கிறது. அதற்கு பதில் மறு இலை துளிர்க்கிறது என்றுதான் அர்த்தம். எதையும் அதன் சந்தர்ப்பத்தினின்றும் பிடுங்கி அதில் புது அர்த்தம் படிக்க முயல்வது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது மட்டுமல்ல; பாபம். அந்தப் பாபச் செயலால் பல கொடுமைகளே விளைகின்றன.

இங்குள்ள மாஞ்செடியை வேருடன் பிடுங்கிக் கொண்டு போய் ஆப்பிரிக்காவில் நட்டால், அது அங்கே மல்லிகையாக மாறிவிடாது. மாறினால் உஷார்; ஏதோ ஆபத்து.

வேர் களைந்தது செத்த பொருள் மட்டுமல்ல, விபரீதப் பொருள்.

'பசு இரவெல்லாம் வேதனைப்பட்டு விடிகாலையில் மூன்று தலை நாலுடலுடன் மனித ஜாடையில் ஒரு செத்த பிறவியை ஈன்று, மூன்று மணி நேரத்துக்குப் பின் தாயும் உயிர் நீத்தது என்று தினசரிப் பத்திரிகை களில் படிக்கிறோமே, அந்தக் கதைதான்.

அதுபோன்ற புதுமை விளைவிக்க நான் ஆசைப்படவில்லை. வாழத்தான் ஆசைப்படுகிறேன். என் தேக, மன வளர்ப்பின் தர்மப்படி, நான் ஐதீகவாதிதான், ஐயா, நான் தான்தோன்றி அல்ல, 'ஐதீகம்' எனும் சொல் பிரயோகத்தில் அதனுடன் சேர்ந்த அதன் குற்றம் குணங்களுடன், ஆட்சேபணை ஆமோதனைகளுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/241&oldid=1533322" இலிருந்து மீள்விக்கப்பட்டது