பக்கம்:பாற்கடல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

19


ஒரு சக பத்திரிகை, அதுவும் ஆங்கிலப் பத்திரிகையில் என் எழுத்து பற்றிய முதல் விமர்சனம், பாராட்டாகவும் அமைந்ததென்றால், அதைப் படித்துவிட்டு நாலுபேர் என்னைப் படித்து விசாரிக்கவும் வருவதென்றால் (ஏதேது, நம்ம ராமாமிருதமா?) என்னைக் கட்டிப்பிடிக்க முடியுமா ?

பூர்வாவின் கதை - இல்லை, நான் சொல்லப் போவதில்லை. பூர்வாவுக்குப் பின் இரண்டு தலைமுறைகளாயினும் தோன்றிவிட்டன. இன்றைய வாசகர்களுக்குத் தெரியப்படுத்துவது பத்திரிகையின் கடமை என்று ஆசிரியருக்குத் தோன்றினால், அவருக்கு அக்கறையிருந்தால் அவர் மறுபடியும் பதிப்பிக்கட்டுமே! மறுபதிப்புக்கு இப்போதைய எழுத்து நிலவரத்துக்கும் விஷயத்துக்கும் பாணிக்கும் புதுத் தகவலாகவே தோன்றக்கூடிய என் கதைகள் பல, ’அமுதசுரபி’யில் வெளிவந்திருக்கின்றன. இதுவும் அவருக்குத் தெரிந்த விஷயம்தான்.

இன்னமும் ’பூர்வா’ இலக்கிய வட்டாரங்களில் பேசப்படுவதே, கதையின் உரத்துக்குச் சானறு. ’ஜனவி, யோகம், புற்று, பூர்வா’ என்று வாசகர்களின் அன்பான அடுக்கு வரிசையில் சேர்ந்துவிட்டது என்று மட்டும் சொல்லிக்கொண்டு பூர்வா விஷயத்தை முடித்துக் கொள்கிறேன்.

என் கய புராணத்தைப் பற்றிக் கூடிய வரை உஷாராய்த்தானிருக்கிறேன். ஆனால் இந்தக் கட்டங்கள் இந்த வரலாற்றில் தவிர்க்க முடியாதவை. எழுத்தில் ஈடுபாடே ஒரு சுயபுராணம். சுயஹிம்சை புராணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/25&oldid=1532916" இலிருந்து மீள்விக்கப்பட்டது