பக்கம்:பாற்கடல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

247


மாறி, சர்ச்சையில் முற்றி - சண்டை வந்தாச்சு, பிராம்மணா, சோற்று மூட்டையைக் கீழே வையும் என்பதில் முடிகிறது. தவிர எல்லா பதில்களுமே சமாதானங்கள்தாம் என்பது என் துணிபு. சந்தேகங்கள் உண்டு மறுக்க முடியாது. முக்கியமாகச் சிந்தனை விஷயங்களில், அவரவர் சிந்தனையில் ஊறி ஊறித் தெளிவு ஏற்பட வேண்டும். பதிலே அதுதான்.

இது என்னுடைய பார்வை என்கிற மட்டில் நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் பதிலே சொல்லாமல் இருக்க முடியுமா? பதில் சொல்ல வழியில்லாமல் இப்படி ஒரு தர்க்கம் பண்ணி டிமிக்கி பண்ணுகிறேன் என்று சொல்லமாட்டீர்களா? இந்தப் பீடிகையைப் போட்டுக்கொண்டு என்னால் இயன்றவரை சொல்லுகிறேன்.

கேள்வியைக் கேட்ட எழுத்தாளர் என்னிடம் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவருக்குத் தோன்றியதைப் பேச்சுவாக்கில் என் பிள்ளையிடம் சொல்லியிருக்கிறார் என்பது என் நினைவில் இருக்கிறது. ஆனால் என்றேனும் ஒரு நாள், வேறு யாரிடமிருந்தும் இந்தக் கேள்வி எதிர்பார்க்கக்கூடியதுதானே! தவிர இது இலக்கியத் தரமான கேள்வி. இலக்கிய ரீதியில் சமாதானம் சொல்வது முறையே. நிற்க.

எழுத்துத் துறையில் நான் இறங்கப்போவது, என் சுயசரிதம், அது பாற்கடல் என்கிற தலைப்பில், (அப்போது கர்ப்பவாஸம் கூடக் காணாத) 'அமுதசுரபி' என்கிற பத்திரிகையில் இடம்பெறப் போகிறது. இவற்றைத் திட்டங்களாக என் குழவிப் பருவத்தில் எப்படி நான் கண்டிருக்க முடியும்? அந்த எண்ணத்தில் இதற்குப் பின் இது என்கிற வரிசையில், தோன்றும் போதே, என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/253&oldid=1533344" இலிருந்து மீள்விக்கப்பட்டது