பக்கம்:பாற்கடல்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

லா. ச. ராமாமிருதம்


இன்னொன்று, யாரைச் சுற்றியுமே வெட்ட வெளிச்சத்தை எதிர்பார்க்க முடியாது. ஸ்டுடியோவில் நூற்றுக்கணக்கான candle poverஇல் headlights arc lamp நடுவில் கேமிரா எவ்வளவு பெரிய பொய்களைச் சொல்கிறது தெரியுமா? கேமரா மேதை கே. ராம்நாத் சொல்வார்: "The Camera never liesஇல் வளர்ந்துவிட்ட பேச்சு வழக்கு பெரும் புளுகு. பொய்யைத் தவிர வேறெதுவும் அது சொல்லவில்லை. பொய்க்கென்றே பிறந்தது.”

ஒளியும் நிழலும் சேர்ந்ததுதான், மனிதனின் வெளித் தோற்றம், உள் தோற்றம், பேச்சு, தன்மை, குணாதிசயங்கள் எல்லாமே. யாரையும் அகில்புகை சூழ்ந்து கொண்டிருக்கிறது. முகஸ்துதி, தூற்றல், வதந்தி, அவனே தன்னைச் சுற்றி அறிந்தும் அறியாமலும் ஏற்படுத்திக் கொள்ளும் அரண் (பட்டவர்த்தனம், வெகுளித்தனம் கூட அரண்கள்தாம்) இத்யாதி இந்தப் புகையைப் பயக்கும் திரவியங்கள். இந்த மூட்டத்தில் அவ்வப்போது வெளிப்படும்வரை அந்த ஆளின் காக்ஷி சென்றபின் புகை மேலும் கவிந்துகொள்கிறது.

What is Truth? என்ன அற்புதமான கேள்வி? எதனுடைய உண்மையையும் அதன் முழுமையில் அறிய முடியாது.

இதழ்கள் ஸஹஸ்ராகாரமாக விரிந்துகொண்டே இருக்கின்றன். விரிய விரிய உள்ளே இன்னுமொரு மொட்டு; இதழ்களாக இருத்தல் நம் பாக்கியம்.

ஓரிரு சமயங்களில் கதைப்போக்கின் யூகத்தில் வெளிப்பட்ட விஷயங்கள், உண்மையிலேயே அவை அப்படித்தான் என்று பின்னால் நிரூபணமாகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/256&oldid=1533347" இலிருந்து மீள்விக்கப்பட்டது