பக்கம்:பாற்கடல்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

253


னால் ஒரே விசிறி. நதிகள் கடலில் கலக்கின்றன. கடலும், இந்தச் சங்கமத்தில் நதிகளுடன் கலக்கிறது. பழம் பசலி உவமைதான். ஆனால் வேறு பொருந்து வதாகத் தெரியவில்லை.

ஒரு நண்பர் எழுதுகிறார்:

“இம்மாத(ஜூன்)ப் பாற்கடல் படித்தேன். எத்தனையோ வருடங்களாகியும் அந்த நிகழ்ச்சிகள் பசுமை மாறாமல் ஜீவன் ததும்புகிறது. உங்கள் முன்னோர்களுக்கு நீங்கள் எழுப்பும் ஞாபகச் சின்னங்கள் மகத்தானவை. படிக்கிறவர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் அவ்வித நினைவுச் சின்னங்களை மனசில் எழுப்பிக் கொள்ளவும் அவை செய்கின்றன. எழுத்தின் உண்மை இதை ரகசியமாக நம்மை அறியாமல் செய்துவிடுகிறது”

இதைவிடப் பேறு எது? விசுவ தரிசனத்தின் மின்னல் அடிக்கிறதா?

குழந்தைகளா, கலத்தில் கொஞ்சம் கூடுதலாகத்தான் விழுந்துவிட்டது. எறியாமல் சாப்பிட்டுவிடுங்கள். சமத்துக் குட்டிகளோன்னோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/259&oldid=1533352" இலிருந்து மீள்விக்கப்பட்டது