பக்கம்:பாற்கடல்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15

ந்த ஞாபகசக்தி விவகாரத்தையொட்டி, இன்னும் கொஞ்சம்.

மதுரை சர்வகலாசாலையில் - 1978-இல் என்று நினைக்கிறேன் - இதுமாதிரி விஷயங்களில் தேதிகளில் நான் ப்ளாங்கி - என் எழுத்து பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கு (Seminar) நடைபெற்றது. என் புத்தகங்கள் அந்த யுனிவர்ஸிடியில் எம்.ஏ. வகுப்புக்கு விதிக்கப்பட்டிருந்தன. என்னையும் அழைத்திருந்தார்கள், கேள்விகளுக்கு பதில் சொல்ல.

அங்கு என் ஆரம்ப உரையில், என் பல்லவியைப் படித்தேன். ”நான் என்னுடைய பதினெட்டு பத்தொன்பதாவது வயதில் எழுதத் தொடங்கியபோது, நான் பிரசுரிக்கப்படுவேன்; தொடர்ந்து பிரசுரிக்கப்படுவேன்; என்னை முழு புத்தகங்களாகப் பார்ப்பேன்; என் புத்தகங்கள் கல்லூரிகளுக்கு விதிக்கப்படும். என்னுடைய அறுபத்திரண்டு அறுபத்து மூன்றாவது வயதில் கருத்தரங்கில் இன்று உங்கள் எதிரில் நிற்கப் போகிறேன் எனக் கனவிலும்கூட நான் எதிர்பார்த்திருக்க முடியாது.”

லா.ச.ரா.வின் எழுத்து, அதன் பல கோணங்களில் சிறுகதை, நாவல், பாத்திரப் படைப்பு, நடை, வெளியீட்டு உத்திகள், தத்துவம் (!) இத்யாதி - அலசப்பட்டன. இதற்கு என்றே வேறு கல்லூரிகளிலிருந்து அழைக்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/260&oldid=1534340" இலிருந்து மீள்விக்கப்பட்டது