பக்கம்:பாற்கடல்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

லா. ச. ராமாமிருதம்


தான், இலக்கியங்களைப் பரிமளிக்கச் செய்யும், உவமான உவமேயங்கள், கற்பனைகள், அலங்காரங்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றன.

கணித சாஸ்திரத்தில் பரிச்சயமுள்ளவர்கள் ஜியோமதியில் Construction என்கிற பிரயோகத்தைப் புரிந்துகொள்வார்கள். அதாவது ஒரு நிரூபணையின் நிமித்தமாக, கணிதத்தில் ஏற்கெனவே இல்லாத குறிப்பாகக்கூட உணர்த்தாத ஒரு புதுக்கோட்டையோ புதுக்கோணம் அல்லது வளைகோட்டையோ (arch) வரையவோ, அல்லது ஏற்கெனவே இருக்கும் கோட்டை நீட்டவோ வேண்டி வரும். இந்தப் புது நிர்மாணம் இல்லாமல் நிரூபணையே முடியாது. இலக்கியத்தில் poetic license இதேபோல்தான்.”

கருத்தரங்கில் நான் அளித்த பதில் இம்மட்டுடன் தான். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஏறக்குறைய ஐந்து வருட அவகாசத்தில் சாதக விளைவாய்க் கூடியிருக்கும் சொல்முறை அனுபவத்தில் இன்னும் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.

கதையில் அடுத்து நான் குறிப்பிட்ட பகுதி இதோ.

வருகிற வருடமும் வழக்கம்போல் இதே தினத்தன்று காலை மிஸ் ஹெர்மாயின் யானைத் தலையளவு பூச்செண்டுடன் உள்ளே நுழைகிறாள்.

”ஹல்லோ மிஸ்டர் ராம், குட்மார்னிங்! நீங்கள் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும். இந் நன்னாள் திரும்பத் திரும்ப வர வேண்டும்!”

அவள் வார்த்தைகள் தடைபடுகின்றன. நான் எழுந்திருக்கவில்லை. என்னுடைய கண்கள் மூடியிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/264&oldid=1534345" இலிருந்து மீள்விக்கப்பட்டது