பக்கம்:பாற்கடல்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

லா. ச. ராமாமிருதம்


என்பது வெறும் கப்பு. 'Gas’ காற்றாடி விடுவதல்ல; இஷ்டத்துக்குக் கயிறு திரிப்பதல்ல. அதற்கும் பிரமாணங்கள், பிரமாணிக்கங்கள் உண்டு. நித்தியத்துவத்துக்கு நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலவரைகளைத் தாண்டி, எண்ணத்தின் வன்மையில், சாதுர்யத்தில் நிகழ்ச்சியை அதன் வரம்புக் கோட்டினின்று விடுதலை செய்து, விரிவு கண்ட அந்தத் தடத்தில் என்ன நடக்கிறது, நடக்கக்கூடும் என்பதை அனுமானத்தில் காண்பதுதான் கற்பனை. It is not anybody's guess. It is Calculated. Watch out for test tube reaction in experimental idea-chemistry (ஆங்கிலத்தில் திடீரென நழுவிவிட்டதற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய தற்சமய உள் எழுச்சிக்கு என்னால் தமிழைச் சுற்றிச் சுற்றி வர முடியவில்லை. ஆங்கிலத்திலும் என் முயற்சி பற்றவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது) கரணம் தப்பினால் மரணத்தில், கழைக் கூத்தாடி ஒரே மூர்ச்சத்தில் முயலும், ஒண்ணு - ரெண்டு மூணு - நாலாவது உச்சி அந்தர் பல்டி. மேகங்களுள் உரு மறைந்து கீதக்குரல் மட்டும் எட்டும் வானம்பாடியின் அந்தர்த்தியானம்.

குறிப்பிட்ட இந்த இதழ்கள் கதைப் பாணி, 'நான்' என்கிற முறையில் அமைந்த விஸ்தரிப்பில் நானும் எதிர்பாராத ஏதோ ஒரு கவிதைத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டே போகையில், கதாநாயகன் இறந்துவிட்டதால் கதைப் போக்குக்காகப் படர்க்கைக்கு (Third Person) மாறினால் கவிதைக் கமழ்ச்சிச் சிதைவால், எனக்குக் கதையே போச்சு.

Poetic license பற்றி இந்த அளவுக்குச் சொல்ல முனைந்தது இளம் எழுத்தாளர்களுக்குப் பயன்படாதா என்கிற சபலந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/266&oldid=1534348" இலிருந்து மீள்விக்கப்பட்டது