பக்கம்:பாற்கடல்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

275


கற்பூரக் கொழுந்து போன்ற அந்தச் சிவப்பும், நிமிர்ந்த முதுகையும் (உபமானங்கள் இப்போதவை) அன்றுதான் முதலாகப் பார்க்கிறேன் போலும். ஏதோ தைரியம் என் உள் புகுவதை உணர முடிகிறது.

அன்று மாலை ஆஸ்பத்திரியிலிருந்து அவர் வீடு திரும்பியதும் அவருடைய நோட்டுப் புத்தகத்தில் மணிமணியாக எழுதிக் கொண்டிருக்கிறார். மனசில் ஆயிரம் சந்தேகங்களுடன் அவரை அணுகுகிறேன்.

“தாத் - அப்பா, அம்மா எப்போ வருவா?”

“அதே கேள்வியைத்தான் இப்போ நான் அவளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”

“எவளை ?”

முகம் நிமிர்ந்து என்னைப் பார்க்கிறார். லேசாகப் புன்முறுவல் பூக்கிறார். என் தலைமேல் கையை வைக்கிறார். கை சுடுகிறது.

எனக்குத் திடீரென்று அழுகை வருகிறது. கூடவே சிரிப்பும் வருகிறது.

அதுதான் அவளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/281&oldid=1534371" இலிருந்து மீள்விக்கப்பட்டது