பக்கம்:பாற்கடல்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16

ன்னி புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

“மன்னி, அம்மா எப்ப வருவா? நீங்கள் எங்கே போறேள் ?”

பாட்டி முகம் சுளிக்கிறாள். “இது என்னடி அபசகுனம் மாதிரி! போடா உள்ளே!”

“சித்தப்பா, அம்மா எப்போ வருவா ?”

“அம்மா எப்ப வரணும்னு பெரியவாளுக்குத் தெரியும். நீ அம்மியாத்துக்கு விளையாடப் போ”

சித்தப்பாவே அம்மியாத்துக்குப் போகப் பர்மிஷன் குடுக்கறான்னா பயமாயிருக்கு.

“அம்மி, அம்மா எப்போ வருவா?”

அம்மி என் தோள்மேல் கையை வைத்து நாற்காலியிலிருந்து எழுந்திருக்கிறாள். மலை எழுந்திருக்கிற மாதிரி. அவளால் முடியவில்லை. என்னை உள்ளே அழைத்துச் செல்கிறாள்; படுக்கை அறையில் சுவரில் ஆள் உயரத்துக்கு ஒரு பெரிய படம். அழகான முகம்: தாடி, தலையைச் சுற்றி ஒரு முள் மகுடம். ஆள் சிலுவையிலிருந்து தொங்குகிறான். இடுப்பைச் சுற்றி அந்த இடத்தை மட்டும் மூடிக்கொண்டு கொஞ்சம் துணி. இரண்டு புது மெழுகுவர்த்திகளைக் கொண்டு வந்து, அம்மி படத்துக்கு எதிரே வைத்து ஏற்றி மண்டி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/282&oldid=1534373" இலிருந்து மீள்விக்கப்பட்டது