பக்கம்:பாற்கடல்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

277


யிடுகிறாள். என்னையும் மண்டியிட ஜாடை காட்டுகிறாள். ஆனால் நான் மாட்டேன். அவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். அவள் கண்ணை மூடிக்கொண்டு தலை குனிகிறாள். அம்மி என்ன செய்கிறாள்? சற்று நேரம் கழித்து அம்மி கண்ணைத் திறக்கிறாள். என்னை மெதுவாக அறையை விட்டு அழைத்துக்கொண்டு போய் ஒரு சின்ன பீங்கான் தட்டில் பிஸ்கட், வாழைப் பழம் இன்னும் ஏதேதோ எடுத்து அடுக்குகிறாள்.

எனக்கு.

ஆனால், எனக்கு இப்போ வேண்டியில்லை. நான் தொடக்கூட இல்லை. வெளியேறுகிறேன்.

ஒருநாள் திடீர்னு வீடு பளிச்சிடுகிறது. வாசலில் கோலம் போட்டு, செம்மண்ணிட்டு உள்ளே வாசல் அறையில் கட்டிலைத் தயார் பண்ணி, புது தலகாணி உறை –

அம்மா வரப்போறா.

அம்மா வந்துட்டா.

வாசலில் ஜட்கா நிக்கிறது. வாசலில் சின்னவா பெரியவா எல்லாருமே கூடி இருக்கிறோம்.

ஆனால் மன்னி மேல் ஒருமட்டா தாங்கிக்கொண்டு ஜட்காவிலிருந்து இறங்குவது அம்மாவா? இது அம்மாதானா? அம்மா மாதிரி யாரோவா? குழி விழுந்து கன்னம் ஒட்டிப்போய், தேஞ்சு மாஞ்சு -

“அம்மாப்பொண்ணே, வந்தையா? வாடியம்மா?! - தாத்தா, “நான்தான் அன்னிக்கே சொன்னேனே. அவள் என்ன சத்தியம் மறந்தவளா?” பாடுகிறார். வெண்கலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/283&oldid=1534374" இலிருந்து மீள்விக்கப்பட்டது