பக்கம்:பாற்கடல்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

281


அந்தப் பிரசாதம்தான் என்னிடம் ஏதோ ஓர் அளவுக்கு இப்பவும் பேசுகிறதோ?

அம்மாவுக்குச் சாதம் போடும்போதெல்லாம் மன்னி கதவை மூடிக்கொள்கிறாள். அப்படியும் அவாளுக்குத் தெரியாமல் நான் தலையை உள்ளே நீட்டுகிறேன்.

அம்மாவின் கை வழிய முழு நெய், அம்மாவுக்கு மட்டும் தனிச் சமையல்; கெட்டித் தயிர். பாட்டி என்னைப் பார்த்துவிட்டாள். எழுந்து ஓடி வருகிறாள்.

“ஒடு! ஒடு! மத்ததெல்லாம் இவன் மாதிரி இருக்கா பாரு. இவனுக்குத்தான் இந்த நுழைநரித்தனமெல்லாம்!”

சாப்பாடு முடிஞ்சதும் பாட்டி குட்டி குட்டியா அம்பது வெற்றிலையேனும் இருக்கும்; தனித்தனியா மடிச்சு ஒரு துடைப்பக் குசசியில் அத்தனையும் செருகி அம்மாவிடம் எறிகிறாள்.

“சாறை மட்டும் முழுங்கு. சக்கை ஜீரணமாகாது.”

அம்மா முகத்தின் சுண்ணாம்பு வெளுப்பில் உதடுகள் மட்டும் வெகு சீக்கிரம் ரத்தச் சிவப்புக் கொள்கின்றன.

நாளடைவில் அந்தச் சிவப்பு அம்மாவின் கன்னங்களுக்கு, நெற்றிக்கு ரோஸா பரவறது. ராத்திரி ஒரு டம்ளர் நிறையப் பால்.

அப்புறம் காலை ஒரு ஆறு, ஏழு மணிவாக்கில் கிட்டத்தட்ட ஒரு எலுமிச்சம்பழ அளவில் மருந்து தின்கிறாள். பிள்ளை பெற்றாள் லேகியம் பண்ணின சூட்டில் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு சுண்டைக்காய் கிடைத்தது. ஒரே காரம், கொஞ்சம் கசப்பு. ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/287&oldid=1534380" இலிருந்து மீள்விக்கப்பட்டது