பக்கம்:பாற்கடல்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

லா. ச. ராமாமிருதம்


தாண்டி ஒரு தித்திப்பு. நெய் எல்லாம் சேர்ந்து என்னவோ ரொம்ப ஜோர்.

அம்மா அறையை விட்டு வெளியே வந்து படிப் படியாக வீட்டுக் காரியங்களில் படிய ஆரம்பித்த பின்னரும் ரொம்ப நாளைக்கு அந்த மருந்து மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். வலிக்கிறதா?

”அது என்ன ராத்திரி கண் மூடறவரையில் வாய் மூடாப் பட்டினியோ, சதா எதையேனும் அரைச் சிண்டு ! கொட்டடா குடையடான்னு அந்த உடம்பு என்னத்துக்குத்தான் இப்படி அலையறதோ?” மத்யானம் இட்டிலிக்குச் சட்டினிக்கு உடைச்ச கடலை வாங்கி வெச்சிருந்தால் பொட்டலம் காலி, வெல்ல டப்பாவில் திடீர் திடீர் என பெரிய கட்டி சின்னக் கடடிகளாகத் தானே பிட்டுக்கொள்ளும்.

“யாரு? அவன்தான். எங்கேடிம்மா வெச்சுக் காப்பாத்தறது? வயத்துலதான் வெச்சுக் காப்பாத்தனும்!”

“அவன் வயத்துலதானே வெச்சுக்கறான்!”

அம்மாவுக்கு ரோசமாயிருக்கு. பல்லைக் கடிக்கிறாள். அடிக்கிறாள். நேக்குச் சிரிப்பாயிருக்கு.

ஒருநாள் பின்கட்டில், எல்லோரும் பேசிக்கொண்டிருக்கையில், முன் அறையில், என்னுடைய அனுமார் தேடலில் ஜன்னல் பிடிச்சுவரில் மருந்து பாட்டிலைப் பார்த்துவிடுகிறேன். நேற்றுத்தான் மறுபடியும் மன்னி புதுசா பண்ணி, பாட்டில் நெறைய அடைச்சு வெச்சிருக்கு. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் திறந்து வழித்துப் போட்டுக் கொள்கிறேன். காரம் காதில் சுரீல் என்கிறது. ஆனால் நாக்கடியில் கூடவே தேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/288&oldid=1534381" இலிருந்து மீள்விக்கப்பட்டது