பக்கம்:பாற்கடல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

23


வெகுநாட்களுக்கு முன்னர், ஆனந்தவிகடனில் ’எங்கள் ஊர்’ என்கிற வரிசையில் லால்குடியைப் பற்றிய என் கட்டுரை வெளிவந்தது. என்னைத் தெரியாதவர்கள் கூட என்னை அதுபற்றி விசாரித்ததுகூடப் பெரிதல்ல. சிவராஜ் குருக்களையே வீடு வந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கட்டுரைக் கடைசியில், எங்கள் ஊர் மண்ணைக் கிள்ளி ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறேன் என்று எழுதியிருந்தேன். அந்த வரிகள் தாம் வாசகர்களை மிகக் கவர்ந்த இடம் போலும்! என்னைச் சந்திக்கும்போதெல்லாம் அதை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பவர் இன்னும் இருக்கிறார்கள்.

எங்கள் ஊர், எங்கள் வீடு, எங்கள் குடும்பம், என் திருஷ்டியில் எனக்கு உழம்பலாய்த்தான் இருக்கிறது.

எங்கள் லால்குடி வீடு இப்போ எங்களுடையதல்ல. அது கைமாறிய கதை வேறு; அது இங்கு வேண்டாம். இப்போ அது சிவராஜ குருக்களுக்குச் சொந்தம். அவரும் காலமாகிவிட்டார். அவருடைய பிள்ளைகள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுக் குடித்தனம், நல்ல பையன்கள். எப்பவும் இதேபோல் சேர்ந்து இருக்கணும். அவர்கள் என்னை மறக்கவில்லை. சமீபத்தில் சப்தரிஷியின் பிள்ளைகளின் பூணூலுக்கு அழைப்பு வந்தது. சிவராஜ குருக்கள் அன்றிலிருந்து இது பெருந்திருப்ரசாதம்; எப்பவும் உங்கள் வீடுதான்’ என்று சொல்லும் விதத்திலேயே உள்ளம் நெகிழ்ந்துவிடும்."

சிவராஜ குருக்கள் பெருந்திருவின் அர்ச்சகர். அவர் வழியில் பூஜ்யர்.

என் தந்தையார் காலத்திலிருந்தே குடும்பம் லால்குடியை விட்டுக் கலைந்துவிட்டது. அடுத்த சந்ததி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/29&oldid=1532921" இலிருந்து மீள்விக்கப்பட்டது