பக்கம்:பாற்கடல்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



17

நாளடைவில், ஆண்டித்தெரு வீட்டு இடம் எங்களைக் கொள்ள முடியவில்லை. வளரும் குழந்தைகள். சித்தி வயிற்றில் வேறு, 'அன்னம்' வைத்து விட்டது. (அப்படி என்றால் என்ன ?) மன்னியும் தாத்தாவும் ஒன்றாகவோ, மாறி மாறியோ, லால்குடியில் பாதி, பட்டணத்தில் பாதி நாளாக வந்து போய்க் கொண்டிருந்தனர். சமாளிக்க முடியாத நிலைமை வந்த பிறகுதான் அம்முவாத்தில் மாறுதலுக்குத் தயாராவார்கள். அந்தச் சுபாவம் என்னிடமும் போகவில்லை என்பது என் மக்களுடைய கருத்து.

ராயப்பேட்டையிலேயே முத்து முதலித் தெருவுக்குக் குடித்தனம் மாறிற்று. ஏய்டி, பழைய வீட்டைவிட இங்கே நிஜம்மாகவே இடம் தாராளம். இங்கே சித்தப்பாவுக்கும் தனி அறை. எங்களை ராத்திரி வேளையிலேனும் போட்டு அடைக்க எப்பவுமே, அண்ணா, அம்மாவுடன் தனி இடம் உண்டே!

இங்கேயும் பின் கட்டுதான். இந்த இரண்டு படுக்கையறைக்கும் சமையலறைக்கும் இடையே மானம் பார்த்த பெரிய தாராளமான தாழ்வாரம். தாத்தாவும் பாட்டியும் அநேகமாக அங்கேதான் வாசம். முற்றத்தில் தான் குழந்தைகளுக்கு அநேகமாக ராச்சாப்பாடு, நிலாச்சாப்பாடு. வழக்கமான மோருஞ்சாதத்தையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/293&oldid=1534388" இலிருந்து மீள்விக்கப்பட்டது