பக்கம்:பாற்கடல்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

லா. ச. ராமாமிருதம்


பிசைந்து மன்னி எங்களுக்கு நிலாவில் போட்டால், நிலாச் சாப்பாடு.

இந்த வீட்டிலும் இரண்டு குடித்தனங்கள்தாம். ஆனால் முன் கட்டுக்காரர்களுடன் நாங்கள் - (நாங்கள் என்றால் குழந்தைகளைச் சொல்கிறேன்) ஒட்டிக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் வீடு கட்டியிருக்கும் வாகோ, மனுஷாள் வாகோ, அறியேன். முதலில் அவர்கள் ஓட்டல் வைத்து நடத்தவில்லை. அம்மி மாதிரி அவர்களிடமிருந்து எங்களுக்கு ஸ்வாரஸ்யமான வரவு இல்லை, வரவே இல்லை.

வீட்டுக்கு இரண்டு பெரிய திண்ணைகள். அங்கு உட்கார்ந்தபடி தெருவில் பறக்கும் வண்டிகளையும் ஜன நடமாட்டத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவே எங்களுக்குப் பொழுது போதவில்லை.

ஓரிரு முறை, அம்மி அவளுக்குரிய புன்னகையுடனும் வந்தாள். எங்களையும் ஓரிரு முறை தன்னுடன் அழைத்துக்கொண்டு போய் வைத்துக்கொண்டு, மாலையில் திரும்பக் கொணர்ந்து விட்டாள்.

ஆனால் அதுவே படிந்த பழக்கமாக எப்படிச் சாத்தியமாகும்? எங்களுக்கும் அக்கறை மங்கிவிட்டது. நான் சொல்கிறேன் கேளுங்கள். குழந்தைகளைப் போன்ற இரக்கமற்ற ஜந்துக்கள் கிடையாது. அவர்களுடைய மறதி சட்டானது, கொடுரமானது. Out of Sight, out of mind - பெரியவர்களுக்கே வசனம் துணையிருக்கிறதே, சிறியவர்களைப் பற்றிக் கேட்பானேன்!

சமீப காலமாகவே, ஒரு கேள்வி என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. வட்டத்தின் சுற்றுக் கோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/294&oldid=1534391" இலிருந்து மீள்விக்கப்பட்டது