பக்கம்:பாற்கடல்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

289


முடிவதற்குத் தன் ஆரம்ப இடத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாலா?

ஒரு வாழ்நாளில், எத்தனைபேரைச் சந்தித்தாகிறது? எத்தனை நட்புகள், பழகிய கட்டங்கள் நேர்கின்றன. அந்தப் போதுக்கு - நமக்கு ஆகாதவர்களாக, ஆனவர் போக - அந்த நட்புகள், அந்த முகங்கள் இனியவை யாகத்தான் இருந்தன. ஆனால் அந்தத் தொடர்புகளை ஏன் நம்மால் கடைசிவரை பேணிக் காப்பாற்ற முடியவில்லை.

நான் S.S.I.C. பரீட்சை எழுதும்போது எனக்கு வயது பதினைந்துக்கும் பதினாறுக்கும் இடையில். பின்னால் குட்டெழுத்து, தட்டெழுத்துப் பரீட்சைகளில் தேறினேன். என் மொத்தப் படிப்பே அதோடு சரி. என்னையும், எங்கள் வீட்டில் அண்ணாவிடம் படித்துக் கொண்டிருந்த மாமா பிள்ளையையும், அப்போது கள்ளிக்கோட்டையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் மாமா வீட்டுக்குக் கோடை விடுமுறைக்காக அண்ணா அனுப்பினார். என் முதல் தனியான ரெயில் பயணம். அண்ணா எங்களை ஏற்றிய பெட்டியில் தற்செயலாக அந்த மார்க்கமாகப் போய்க்கொண்டிருந்த ஒரு குடும்பத்தை, என்னைக் கண்காணித்துக் கொள்ளும்படி அண்ணா கேட்டுக்கொண்டு, பெரியவர்களின் வழக்கப்படி எங்கள் விடுதலைச் சிறகுச் சந்தோஷத்தைக் கெடுத்துவிட்டார்.

அந்த மாமாவுக்குச் சுமார் 55 வயது இருக்கலாம். வேட்டி, கோட், தலையில் ஒரு சவுக்கத்தை முண்டாசு கட்டியிருந்தார் - பனிக்கென்று நினைக்கிறேன். கடைசி வரை தானாகவும் தளரவில்லை. அவரும் அவிழ்க்க-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/295&oldid=1534392" இலிருந்து மீள்விக்கப்பட்டது