பக்கம்:பாற்கடல்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

303


இருந்தாலும் அண்ணா, எங்கள் அண்ணா. எங்களுக்கு அண்ணா மிஞ்சியிருக்கார்.

அண்ணா தன் பத்தியச் சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு - எல்லாமே தனிச் சமையல், தனி அளவு ஏனத்தில் அளவாகச் சாதம் வடியல் உள்பட - பள்ளிக் கூடத்துக்குத் தயாராகிறார். அந்தப் பஞ்சகச்சமும் close Coatlம், டர்பனும் கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரமும்- அவற்றிற்கும் அவர் உடலுக்கும் சம்பந்தமில்லாதவை போல் அவர் மேல் மாட்டி வைத்திருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாள் ஓய்வில் இருந்தால் தேவலை, ஆனால் திணறிக்கொண்டேனும் வேலைக்குப் போய்த் தான் ஆகணும். இரண்டு மாதங்களாகக் குடும்பம் திணறுகிறது. சரியான சோதனைக் காலம்.

இப்போ தோன்றுகிறது. கடவுளர்கூட பள்ளிக்கூட வாத்தியார் மாதிரிதான். அவர் சுழிக்கத் தீர்மானித்துவிட்ட பையன், வேறு காரணங்களால் - மார்க்குக் கூட்டலில் வாத்தியார் தப்பைச் சுட்டிக் காட்டியோ, நோட்புக் மார்க்கில் கூட வாங்கி ஈடுகட்டியோ, அல்லது சிபாரிசிலோ, அவர் சிவப்புப் பென்சிலுக்குத் தப்பித்து விட்டால் அவரால் அவனை லேசில் மன்னிக்க முடிவ தில்லை. 'ஓ!' அப்படியா சமாச்சாரம்? நீ இனிமேல் என் முன்னால் உட்கார வேண்டியதில்லை - பின்னாலே போ! அண்ணா back benchக்குத் தள்ளப்பட்டு விட்டார். அங்கே போனவர்கள் [1]Devils island போன மாதிரி. அதிலிருந்து தப்பவே வழி கிடையாதாம்.

பெந்துப் பாட்டியின் பாசம் வேறு. விதியின் தேவதைகளின் கோபம் வேறு. பூசாரி வரம் பெறும்


  1. French penal settlement.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/319&oldid=1534445" இலிருந்து மீள்விக்கப்பட்டது