பக்கம்:பாற்கடல்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

315


தன்னோடு வர எங்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. எங்களுக்கும் சிரத்தையில்லை. எந்தப் புது நிலைமைக்கும் உடனே சரியாகிவிடும் தன்மையில் குழந்தைகளுக்கு நிகரே கிடையாது. பெரியவர்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வரப் போவதில்லை.

அண்ணாவுக்குப் பகலும் இரவும் இழுத்து மூச்சில் தந்திக் கம்பம் வாசித்தால் என்ன, எங்கள் தூக்கம் கலைவதில்லை. ராச்சாப்பாடு முடிந்ததும் நாங்கள் எங்கள் ஜமாவைச் சேர்த்துக்கொண்டு வாசல் திண்ணையில் கூடித் தாத்தா சொன்ன கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்போம். எங்கள் சொந்தச் சரக்கையும் சேர்த்து எங்கள் புது அலையில் (அஹ்ஹா அர்ச்சுனன் கதையைத் தூக்கிக்கொள்வான். பீமன் வில்லாளி ஆகிவிடுவான். லக்ஷ்மணனோடு கர்ணனைச் சண்டைக்கு விட்டுப் பார்ப்போம். ராவணனுக்கு இரண்டு மூன்று தடவையேனும் யுத்தத்தில் வெற்றி கிடைக்கும். ராமனுக்காக, அசோகவனத்து மரங்களை வளைய வந்து சீதை மடிப்பிச்சை எடுப்பாள். எங்களைக் கேட்பதற்கு ஆள் இருந்தால்தானே!

பிள்ளைக்கு உயிர்ப்பயம் இல்லை என்று தெளிந்ததும் தாத்தா ஊருக்குப் புறப்பட்டுவிட்டார். அவரால் பெருந்திருவைப் பிரிந்திருக்க முடியவில்லை.

“பெருந்திருவையா? யெச்சுமியையா?” அண்ணா மன்னியைக் கேட்பார். “பிள்ளை உடம்பு தேற இட்டுக் கட்டின பாட்டுக்களை அவளிடம் அரங்கேற்ற வேண்டாமா ?”

“ஆமாம். சின்ன நாத்தனார் காலமானபின், அப்பாக்குப் பெரியத்தைதான் யோசனைக்கு. அவளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/321&oldid=1534447" இலிருந்து மீள்விக்கப்பட்டது