பக்கம்:பாற்கடல்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

லா. ச. ராமாமிருதம்


சாமானியமா? ராமநாதபுரம் ஸ்மஸ்தான சங்கீத வித்வானுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். உங்கள் அப்பா கால்நடைக்கு வாளாடி கொல்லைப்புறம்.”

‘சரிதான் மன்னி, நான் சொல்றது வாளாடி அத்தையை இல்லை. இந்தச் சாமர்த்தியமெல்லாம் உனக்கெப்போ வந்தது?”

அண்ணாவுக்கு, அப்பாவின் காதல் கிழத்தி மேலிருந்த கசப்பை மன்னியிடம் நான் காண முடியவில்லை. மன்னி, உங்கள் தோல் வலிமை தடிமனா, அல்லது இப்போது எங்கள் பாஷையில், adjustment திறமை அவ்வளவு அபாரமா?

என் தம்பி இன்னமும் என்னிடம் பாடுகிறான். கொக்கரிக்கிறான், வாய்ப்பாடு ஒப்பிக்கிறான். 'அஜஸ்ட்! அஜஸ்ட்! அஜஸ்ட்!' (நடுவில் ‘d’ காலி தெரிகிறதா?) அது இல்லாததனால்தான் நீ திண்டாடித் தெருக்குலைந்து உள்ளேயே வெந்துகொண்டு வயசுக்கு மீறின கிழம் காட்டறே! என்னைப்பார், எதையுமே காதில் போட்டுக் கொள்ளாததால் எவ்வளவு இளமையா யிருக்கேன்! நான் ஆதம்பாக்கத்து M.G.R.

சைதாப்பேட்டையில் குடியிருந்தபோது சைதாப் பேட்டை M.G.R.

ஒருநாள் எதிர்வீட்டுப் பையன், பெருமையாக எங்களிடம் ஒரு சாமானைக் காண்பித்தான். அவனுக்குத் தெருவில் கிடைத்ததாம் Compass. நிமிஷம் கூட ஓயாத அதன் முள் ஆட்டம் எங்களுக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. நாம் தூங்கிப் போயிட்டாக் கூட அப்படித்தான் துடிச்சுண்டிருக்கும். எங்கப்பா சொன்னா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/322&oldid=1534448" இலிருந்து மீள்விக்கப்பட்டது