பக்கம்:பாற்கடல்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

லா. ச. ராமாமிருதம்


“பேஷ். ராஜ சாப்பாடு! இதுக்கு மேல் என்ன வேணும்?”

“கண்டிப்பா வடுமாங்காய் உங்களுக்குக் கிடையாது. உங்கள் கண்ணெல்லாம் எங்கே , இந்தச் சூழ்ச்சியெல்லாம் எதுக்குன்னு எனக்குத் தெரியும்.”

“சரி, வேண்டாம், மோரும் சாதத்துக்குக் கீரையும் குழம்பும் கலந்துக்கக் கைபிடிக்க முடியாதே?”

“மோரும் சாதமா? சப்தரிஷி”

“ஆனாலும் அக்கிரமம் பண்ணாதேயுங்கோடி. மோரைச் சுடவெச்சுப் போடுங்கோ.”

ஊரில் உள்ள அத்தனை பேச்சையும் பேசிண்டு, சிரிச்சுண்டு, சத்தம் போட்டுண்டு சாப்பிடுவோம்.

“ஏ பசங்களா! சின்ன வயசுலேருந்தே எனக்கு இப்படித்தான் சாப்பிடணும்னு ஆசை. ஆனால் அது இப்போத்தான் கிடைக்கணும்னு இருக்காப்போல் இருக்கு.“

மனம் நிரம்பறதுன்னா நிஜம்மா அதுவும் Cup போல வழியும்னு லேசா அப்பவே ஒரு உணர்ச்சி தோணித்து.

இன்னும் மோருஞ்சாதத்துக்கு வந்திருக்க மாட்டோம். அண்ணா பேச்சு அடங்கிப்போய், எங்களை ஒரு தினுசாப் பாக்கறா. அந்த மிரண்ட முழியை அடையாளம் கண்டுகொள்ள எங்களுக்கே தெரிஞ்சு போச்சு. அடுத்த சில வினாடிகளில் “கொர் கொர், லொக்கு லொக்கு, கல் கல்.“ அந்த ஆஸ்துமா அரக்கன் கொலுசு கட்டிண்டிருப்பானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/324&oldid=1534450" இலிருந்து மீள்விக்கப்பட்டது