பக்கம்:பாற்கடல்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

319


நெஞ்சை அடைக்கிறது. டேய், உனக்கு தைரியம் இருந்தால் வெளியே வாடா, அண்ணா உள்ளே ஒளிஞ் சுண்டு அவரை என்ன மிதி மிதிக்கறே? நீ மாத்திரம் கண்ணில் படு, உன்னை என்ன பண்ணறேன் பார்!

“சப்தரிஷி, சொன்னா கேக்கறையா? நீ எல்லாம் வெட்ட வெளியில் உட்காரப்படாது - இங்கே காற்று நடமாட்டம் ஜாஸ்தி.“

இருமல், இழுப்பின் அவஸ்தையோடு அண்ணா திணறுவார். “மன்னி, காற்று இல்லாட்டா, நாம் எல்லோரும் செத்துப்போயிடுவோம். காற்று இருக்கோ, இழுத்துண்டாவது இருக்கேன். இல்லாட்டா, ஒரேயடியா க்ளோஸ்.“

“அட போடா அசடே, நீ சொல்ற காற்று வேறே! நான் சொல்ற காற்று வேறே!”

அம்மா ஒண்ணும் பேசமாட்டாள். அண்ணாவின் அவஸ்தையை உற்று கவனித்துக்கொண்டிருப்பாள். அவளுடைய கறிவேப்பிலைக் கன்று மறுபடியம் புயலில் சிக்கிவிட்டது.

மறுபடியும் - மறுபடியும் - இதுவரை எத்தனை மறுபடியோ? கணக்கில்லை இன்னும் எத்தனை இருக்கோ ?

சரியானபடி எங்கள் நிலாச்சாப்பாட்டைக் கெடுக்க வந்த பாவி வியாதி.

நிலாவா? யார் சொன்னது? அது அண்ணா பேச்சுக்குச் சொன்னது. எங்களோடு சேர்ந்து சாப்பிடும் சந்தோஷத்துக்கு எல்லாம் நடுமுற்றத்தில், லாந்தர் வெளிச்சம்தான். இந்த வீட்டிலும் மின்சாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/325&oldid=1534451" இலிருந்து மீள்விக்கப்பட்டது