பக்கம்:பாற்கடல்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

321


அப்பா, என்ன அடி! கழுத்தில் ஏறி இருந்தால், லா.ச.ரா. (“புரியாத எழுத்தாளர், புரியாமல் எழுதுவதே அவர் அம்சம்!”) ஏது? மண்டையே ஏன் இந்த இரண்டு அடிகளுக்கும் சட்னி ஆகவில்லை? (மண்டையா அது? சரியான மரக்கட்டை” தேங்காயைச் சுண்டுவதுபோல் ‘ணக் ணக்' பண்ணிக்கொண்டு” — அண்ணா)

எங்களைச் சுற்றி உடனே கூடிவிட்ட கூட்டத்துக்குக் கேக்கணுமா? யாரோ ஒருவன் என்னை எழுப்பி நிறுத்தி என்னைத் தும்பு தட்டினான். ஒரு சிராய்ப்புகூட இல்லை - அடுத்தநாள் பையன்களிடம் பீற்றிக் கொள்ள (போடா டூப் விடறே!) எனக்கு ஏமாற்றம் தான். Death takes a Holiday.

பாட்டி இரு கன்னங்களிலும் அறைந்த கையோடு கல்லாய்ச் சமைந்துவிட்டாள்.

காரைத் தெருவோரத்தில் (அப்போல்லாம் Platform கட்டவில்லை) நிறுத்திவிட்டு யாரோ இறங்கி எங்களைப் பார்த்து நடந்து வரார் - பையிலிருந்து Purseஐ எடுத்துக்கொண்டு. என்னைத் தொடக்கூட இல்லை. (அவர் கையில் நான் பிசுக்கு ஒட்டிக்கொண்டால்? அவ்வளவு பெரிய மனுஷர்) ஒரு முறை கூர்ந்து கவனிக்கிறார் தலையிலிருந்து, கால் வரை. Purse பைக்குள் திரும்பிவிட்டது.

”யாரம்மா பாட்டி? உன் பையனா? நீங்கள் எல்லாம் இப்படிப் பொறுப்பில்லாமல் குழந்தைகளை நடுத் தெருவில் ஓட விடுங்கோ. அப்புறம் எங்களைக் குத்தம் சொல்லுங்கோ? இந்த நாட்டுக்கு எப்படிச் சுதந்தரம் வரும் Road sense ஏ கிடையாது! Fools!”...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/327&oldid=1534453" இலிருந்து மீள்விக்கப்பட்டது