பக்கம்:பாற்கடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

27


போட்டோ ஏது? இருந்தாலும் எடுக்க வக்கு இல்லை. இஷ்டமுமில்லை - எடுத்தால் ஆயுசு குறைவு.

குடும்பம் பெரிசு. ஐந்து பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஜீவனம் ? ஏதோ ஓர் அரைக்காணி நிலத்தில் நடந்தது. இத்தனை பேருக்கும் சாப்பாட்டுக்குப் போதுமா? அதெல்லாம் டிபன் நாளல்ல. நாஸுக்காக உள்ளங்கையில் ஈரம் படாமல் கொறிக்கிற ஆசாமிகள் அல்ல. ஆளுக்கு வேளைக்குக் கால்படி வேணும்.

ஆனால் பாட்டிக்கு மனம் ஒரு மஹால். அவள் மஹாலைப் பார்த்திருக்கமாட்டாள். சரி, தூண்களைத் தட்டிவிட்ட, ஆயிரங்கால் மண்டபம், தூண்கள் விசாலத்துக்குத் தடுப்பு இல்லையா?

ஒருநாள் இல்லாக்குறை, பகல் பட்டினி கிடந்து விட்டு இரவு உண்ண உட்கார்ந்தவள், வாசலில் ராப்பிச்சைக் குரல் கேட்டு, அப்படியே இலையோடு கொண்டுபோய் அவன் ஏந்திய முன்றானையில் போட்டுவிட்டாளாம்.

அது அவள் மனசா? அந்தக் காலத்து மனசா ? . என் அழுக்கு மனசு என்ன அறிய முடியும்?

ஆனால் கொள்ளுப் பாட்டியைப் பற்றிப் பேர் போன கதை, அவள் கறிவேப்பிலைக் கூடைக்காரிக்குப் பிரசவம் பார்த்ததுதான்.

ஒருநாள் ஒரு கறிவேப்பிலைக்காரி - அந்த நாள் கையரிசிக்குத்தான் அனேகமாக எல்லா வியாபாரமும். காசைப் பார்க்கவே கண் கூசும். தம்பிடிக்கே தழையத் தழைய வாங்கலாம், ஆனால் தம்பிடி?

கறிவேப்பிலைக்காரி நிறை மாத கர்ப்பிணி. எங்கள் வீட்டுத் திண்ணையில் கூடையை இறக்கியதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/33&oldid=1533005" இலிருந்து மீள்விக்கப்பட்டது