பக்கம்:பாற்கடல்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

லா. ச. ராமாமிருதம்


அண்ணா பக்கத்தில் மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்தபடி அவர் தாயாரும் மனைவியும் நிற்கிறார்கள்.

டாக்டர் பரிசீலனை ஒப்புக்குத்தான். எத்தனை அனுபவம். அவருக்குத் தெரியாதா என்ன? எழுந்து நின்று பெருமூச்செறிந்து உதட்டைப் பிதுக்குகிறார். வேகமாகக் கீழிறங்கிச் செல்கிறார்.

“ஐயையோ !”

“அழாதேடி கண்ணே! இல்லை, பொறுத்துக்கோ நாம் என்ன செய்ய முடியும்?” கிழவி மருமகளை அணைத்துக்கொண்டு அவள் மோவாயைப் பிடித்துக் கொண்டு தேற்றப் பார்க்கிறாள். ஆறுதல் சொல்கையிலேயே அவள் குரல் உடைகிறது. இருந்தும் சமாளிக்கப் பார்க்கிறாள்.

நாங்கள் கையில் ரஸ்தாளிச் சீப்புடன் பேயறைந்தாற் போல் நிற்கிறோம்.

இடம், ஏவல், ஆண்டவனின் வேடிக்கைச் சித்திரம் எப்படி?

ஒரொரு சமயம் தோன்றுகிறது-சே, இந்த வாழ்க்கை ஏன் தன் உயிருக்கு வந்தது? சின்னப் பையன் தும்பியுள் துடைப் பக்குச்சியை ஏற்றினால் 'பாவி’ என்று திட்டுகிறோம். சுண்டெலி வாலில் கயிறு கட்டித் தலை கீழாகப் பிடித்தால், தாங்க முடியவில்லை. அட்டையில் பட்டுப்பூச்சியை ஊசியால் குத்தித் தைக்கிறான். கண்ணை மூடிக்கொள்கிறோம் கவணால் பறவையை அடித்துக் கீழே வீழ்த்துகிறான். அத்தனையும் அவனுக்கு விளையாட்டு. 'உருப்படுவியா நீ?' என்று சபிக்கிறோம். ஆனால் இப்புவனமே ஆண்டவனின் பரீக்ஷைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/334&oldid=1534518" இலிருந்து மீள்விக்கப்பட்டது