பக்கம்:பாற்கடல்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

லா. ச. ராமாமிருதம்


இலக்கிய அனுபவத்தை வாசகனுக்குச் சொந்த மாக்குவதே 'பாற்கடல்' எழுதும் நோக்கம். இதில் பிறர் காணும் வெற்றி, தோல்வி, குறைகள், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி. என் விளக்குத் தூண்டுகோல் பற்றித்தான் நான் சொல்லிக்கொள்ள முடியும்.

நடுநிசியின் முழுநிலவில் வாழ்க்கையின் கீதத்தைப் பாடிக்கொண்டே தெருவழியே செல்கிறேன். ஏன்? அது என் ஆனந்தம். நான் பிச்சைக்குப் பாடவில்லை. என் இச்சைக்கே பாடிக்கொண்டே போகிறேன்.

சில கதவுகள் திறக்கின்றன.

திறந்திருந்த கதவுகள் மூடிக்கொள்கின்றன.

சிலர் வெளியே வந்து கவனிக்கவும் கவனிக்கின்றனர்.

இதுதான் இலக்கிய அனுபவம்.

ராயப்பேட்டை வாழ்க்கையில் என் முக்கிய நினைவுகளில் ஒன்று மொகரம் பண்டிகை.

மொகரம் பண்டிகையாம்! எனக்கு அப்பவே தமிழ் கூடத் தெரிஞ்சிருந்தால் துயரப் பண்டிகை எனப் பெயர் சூட்டி இருப்பேன். துயரமும் பண்டிகையும் எப்படி

எதிர் மறைகள் சேரும்? நமக்குத்தான் புத்தி இப்படி ஓடும்! எல்லாமே கொண்டாட்டம்.

கொளுத்திவிட்டுச் சுடலையிலிருந்து திரும்பியதும், முப்பருப்பு - பாயஸ்த்துடன் பந்தி.

பத்தாம் நாளன்று முக்கனி, பாயஸம் இத்யாதிகளுடன் விமரிசையாக விருந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/338&oldid=1534524" இலிருந்து மீள்விக்கப்பட்டது