பக்கம்:பாற்கடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

லா. ச. ராமாமிருதம்


இடுப்புவலி எடுத்துவிட்டதாம். இடுப்பைப் பிடித்துக் கொண்டு திருகாடுகிறாளாம். "அப்பா! அம்மா ! அம்மாடி!" நெற்றியில் வேர்த்துக் கொட்டுகிறது. கண் செருகுகிறது. பாட்டிக்கு விஷயம் புரிந்துவிட்டது.

”அடிப்பாவி!”

அவளை அப்படியே தோளில் சார்த்திக்கொண்டு, பாதி நடத்தி, பாதி தூக்கியபடி வாசல் கடந்து ஒழுங்கையறையுள் கொண்டுபோன பத்து நிமிடங்களுக் கெல்லாம் "வீல்.” என்று ஒரு பெரிய அலறல் ஒட்டி ஒரு புதுக்குரல்.

தெரு 'கொல்'.

”அடியே! அம்முவாத்தில் கறிவேப்பிலைக் கூடைக் காரி பிரசவண்டீ!”

மூன்றுநாள் தாயையும் குழந்தையையும் இருத்தி வைத்துக்கொண்டு பத்தியம் போட்டு; அவளுக்கு ஒரு பழம் புடவையும் கொடுத்து (தனக்கே தகராறு தம்பிக்குப் பழையது!), அனுப்பி வைத்தாளாம்.

ஊரே திமிலோகப்பட்டது. அக்ரஹாரத்தில் மூக்கில் விரலை வைக்கும், புருவத்தை உயர்த்தும் அந்நாளில் பாட்டி ஒரு டோன்ட்கேர் மாஸ்டர்.

ஆனால் அம்முவாத்துக்குப் பொறித்த முத்திரை - (வீட்டுக்கு வீடு இதுபோல் ஒரு சின்னம், அடையாளம் சீல்” இருக்குமே!) கொள்ளுப்பாட்டி, கறிவேப்பிலைக் கூடைக்காரிக்குப் பிரசவம் பார்த்த சம்பவம்தான்.

ஆனால் பாட்டி மஹா முன்கோபக்காரியாம். கோபம் வந்துவிட்டால் கண், மண், யார், எது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/34&oldid=1533006" இலிருந்து மீள்விக்கப்பட்டது