பக்கம்:பாற்கடல்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

லா. ச. ராமாமிருதம்


“மற! மற! மற!” உபதேசங்களின் அடிப்படை.

எதை? மறைந்தவர்களையா? அல்ல, அவர்களின் மறைவையா? நடைமுறையில் அதுதான் புரியவில்லை. இரண்டும் ஒன்றுதானே? வித்தியாசம் இருக்கிறதா என்ன?

பைக்ராப்ட்ஸ் ரோடு வீடுகளில், மாடி ஒன்றில் இடம் பிடிச்சாச்சு. காலை பதினோரு மணியிலிருந்தே, ரோடு திமிலோகப்படுகிறது. வெயில்கூடச் சமயத்தை அனுசரித்து மங்கிச் சூரியனும் முகம் தொங்கலில் இருக்கிறானே?

11, 12, 1.

ஜன நெருக்கம் அதிகமாகிறது.

அந்த நெருக்கடியில் இரட்டை மாட்டுக் கட்டை வண்டிகளில் பெரிய பெரிய அலுமினிய அண்டாக்களுடன் வந்தன. அவற்றில் என்ன?

போலீஸ் தலைப்பாகைகள் கூட்டத்தில் செறிந்து கலந்திருந்தன. தவிர, குதிரைகளில் சவாரி செய்யும் போலீஸ் வீரர்கள், அவ்வப்போது கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆம்புலன்ஸ்கள் கூட்டத்தில் திணறின.

மேற்படி இரண்டு வாகனங்களையும் போலீஸ் ஊர்திகளையும் தவிர மற்ற வண்டிப் போக்குவரத்து படிப்படியாக ஓய்ந்து நிறுத்தவும் பட்டுவிட்டன.

ஆ! அதென்ன? 'திடும்! திடும்!' தூர இடிச் சப்தம்? இல்லை, இடிச் சப்தம் மாதிரி? பெல்ஸ் ரோடின் வாலாஜா முனையிலிருந்து, மெதுவாக, விதியின் விலக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/340&oldid=1534526" இலிருந்து மீள்விக்கப்பட்டது