பக்கம்:பாற்கடல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

29


தெரியாதாம். குங்கிலியம் குபீர். ‘புஸ்' தணிந்ததும் சாதுக்கடல். பயப்பட வேண்டிய ஆசாமி.

ன் பாட்டனார் தமிழ்ப்பண்டிதர். மூத்தவர் ஐயாத்துரை- ஐயா, ஊருக்கெல்லாம் ஐயா - அவருக்குச் சுட்டுப்போட்டாலும் படிப்பு - எந்தப் படிப்பும் வரவில்லை.

மற்ற பிள்ளைகள் இடறி விழுந்து, எடுப்பார் எடுத்து மெட்ரிகுலேஷனைப் பிடிப்பதே - அதிலும் யார் யார் தேறினார்கள், கோட்டை விட்டார்கள் என்பது மூடு சூளை ஜகதீசன் ஓரளவு தேவலை, அந்த நாளிலேயே உத்யோகம் குதிரைக்கொம்பு - தகுதியும் இல்லாவிட்டால் எப்படிக் கிடைக்கும்?

இந்தக் கூட்டத்துக்கு ஒரு மட்டாய் வேலை கிடைத்தவிதமே ஒரு குட்டி வரலாறு. இந்தக் கட்டத்தை மனம் இல்லாமல்தான், சொல்ல வேண்டியிருக்கிறதே என்று சொல்கிறேன். எதோ தப்புத்தண்டா, சுவாரஸ்யம் என்று தீட்டிய செவிகள் ஏமாந்துபோகும், காரணம் என் மனம்தான்.

ப்ரசித்தி பெற்ற பெயர்களின் நிழல் எங்கள் மேல் படுவதோ, சரி என்மேல் படுவதை நான் விரும்புவதில்லை. இதென்ன அசூயை, வறட்டு ராங்கி, தவிடு தின்பதில் ஒய்யாரம் என்ன வேண்டிக்கிடக்கு? இருந்து விட்டுப் போகட்டும்.

ஸ்ரீமான் ஜி. சுப்ரமணிய ஐயர், 'ஹிந்து ஸ்தாபகர், காங்கிரஸ்காரர், சமூக சீர்திருத்தவாதி, என் சிறிய பாட்டனார் ஜகதீசனுக்கு மாமனார், இந்த வேலை வாய்ப்புக்குக் காரணமானார். அவர் உறவு வந்த விதத்தில்தான் கதை அடங்கியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/35&oldid=1533007" இலிருந்து மீள்விக்கப்பட்டது