பக்கம்:பாற்கடல்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

“இந்தத் தடவை அவனுக்கு உடம்பு சரியில்லேன்னு லால்குடியிலிருந்து ஆள் வந்ததும் - என்னவோ தெரியல்லே, நானும் பிறந்தாம் போய் நாளாச்சு, ரெண்டுநாள் தங்கலாம்னு உத்தேசத்திலேயே வந்துட்டேன். உள்ளே நுழைஞ்சால் கூடத்தில் படுத்துக் கிடக்கான். காலையிலிருந்து சாப்பிட்டானா, யாரையேனும் கஞ்சி வெச்சுக் கொடுக்கச் சொன்னானா? தெரியல்லே. கேட்டிருக்கமாட்டான். அந்த சவுடாலுக்குத்தான் அம்முவாத்தில் கேக்க வேண்டாமே! கண் ஒரே அடியா உள்ளே போயிருந்தது.

“என்னடா ராமண்ணா, உடம்பு என்ன பண்றதுன்னு மணிக்கட்டைச் சாதாரணமாப் பிடிச்சால், ’பகீர்’ன்னுது. நாடி விழுந்துபோச்சு. அதோடேயே ரெண்டு நாளா நடமாடிண்டிருக்கான். அவனையுமறியாமல் ஜுரம் கீழே தள்ளியிருக்கு. இதுக்கு முன்னாலே ஒரு தடவை இப்படி ஆயிருக்கு.

ராமாமிருதம் பிறக்கல்லே, உண்டாயிருந்தாள்ன்னு நினைக்கிறேன். நாடி விழுந்து மூணுநாள் நடமாடிண்டிருந்து தேறிட்டான். அப்பக்கிப்போ ஆறு ஏழு வருஷம் வித்தியாசம் இல்லியா ? அப்படியே இப்பவும் நடக்கும்னு சொல்ல முடியுமா ? மனுஷன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/352&oldid=1534625" இலிருந்து மீள்விக்கப்பட்டது