பக்கம்:பாற்கடல்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

347


பிறந்துட்டா சிரஞ்சீவியா? அப்புறம் தலைச்சுழிக்கு மதிப்பென்ன? பெருந்திருவுக்கும் பெருமையேது?

ஓசைப்படாமல் கீழண்டை ஆத்துக்குப் போய் சேதுராமையரிடம் சொல்லி, பட்டணத்துக்குத் தந்தி கொடுக்கச் சொல்லிட்டேன். அடுத்த கண்டத்துக்கு வேண்டியவாளைப் பக்கத்தில் கொண்டு வந்து, சேர்த்துட்டாளே? பெருந்திருவால் முடிந்தது அவ்வளவு தான். இங்கே வேண்டியவா யார் இருக்கா?

எல்லோரும் வெளியூரில். முதலித் தெருவில் இருக்கான் போலீஸ்காரன். என் கடமை ஆள்விட்டு அனுப்பிச்சப்போ ஊரில் இல்லேன்னு சேதி வந்தது. இப்போ இருக்கான். இன்னும் வரல்லே. வராட்டாப் போறான். வந்திருந்தால் அவன் போலீஸ் அமுல் போப்போற உசிரைப் பிடிச்சு நிறுத்த முடியுமா?

முதலித் தெருவில், சிதம்பரம் ஐயர், போலீஸ் இலாகாவில், மேலதிகாரிக்குக் காம்ப் கிளார்க், எட்டுக் கண் விட்டெறியும்னு முன் பக்கங்களில் சொல்லியிருக்கிறேன். அத்தை பேச்சிலிருந்து அவர் இந்த வீட்டுடன் ’டு’ விட்டுண்டு இருந்தார் என்று தெரிகிறது. என் ஆயுசில் கடைசிவரை, சிதம்பரம் தாத்தாவைப் பார்த்ததாகவே எனக்கு ஞாபகமில்லை.

அம்முவாத்துச் சம்பிரதாயங்களில் ஒன்று குடும்பத்தில் ஏதேனும் ஒரு விரோதமாவது கொண்டாடியபடி இருக்கும். அண்ணனுக்கும் தம்பிக்கும், அண்ணனுக்கும் தங்கைக்கும்,அக்காவுக்கும் தம்பிக்கும்பெரிய தலை சாக்கில் அந்தந்தக் குடும்பங்களும் கொண்டாடும் என்றால் அசல் - விரோதம் குரோதமாகி, வெள்ளி விழா, ப்ளாட்டினம் இந்த ரீதியில் பகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/353&oldid=1534626" இலிருந்து மீள்விக்கப்பட்டது