பக்கம்:பாற்கடல்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

லா. ச. ராமாமிருதம்


நீடிக்கும். ஒருத்தன் சளைத்தால் மற்றவன் வீட்டில் பாயசம் என்று பேச்சு நடமாடும். நிஜமோ பொய்யோ அறியேன். தமிழ்ப்பண்டிதர் ராமசாமி ஐயருக்கு அந்த அளவு வீட்டில் வக்கு இல்லை. நெஞ்சம் அந்த வேகம் இல்லை. அவர் சண்டை, சமாதானம், ஸாஹஸம் எல்லாம் பெருந்திருவுடன் அவருடைய பாட்டு நோட்டில் பாசிமணி கோத்தாற் போன்ற எழுத்து மூலத்துடன் சரி. ஆசைநாயகி லச்சுமிகூட, அவர் கவி அரங்கேற்றத்துக்குத்தான்.

அதேபோல் கூடிக்கொண்டாலும் ஒரே வெறிதான். அண்ணன் தம்பி ஆற்று வெள்ளம் இதென்ன சாதாரண ரத்தமா? ராஜ வம்ச ரத்தம். அது தப்பாப் பேசுமா என்ன? ஏதோ கொஞ்ச காலம் போறாத வேளை! என்ன சொல்றே அண்ணா ?”

அண்ணாவுக்கும் சிதம்பரத் தாத்தாவுக்கும் ஆகாது.

ஆனால் அம்மாப் பெண்மேல் சிதம்பரத் தாத்தாவுக்கும் பரஸ்பரம் கொள்ளைப் பாசம்.

சுந்தரத் தாத்தாவுக்கு வீடு தமிழ்ப் பண்டிதர் இல்லத்துக்கு மேலண்டை. கொல்லைப் புறத்தில் கிணறு. இருவருக்கும் பொது எப்பவோ ஏதோ மனஸ்தாபத்தில் சுந்தரம் ஐயர் கிணறுக்குக் குறுக்கே சுவர் போட்டு விட்டார். கிணற்றில் பெரும் பாதி அவர் பக்கம். இங்கே ஒரு சொம்புக்கு மேல் மொள்ள வழியில்லை. சுவர் தடுத்தது. சண்டை போய்ச் சமாதானம் வந்தது. ஆனால் சுவர் நின்றுவிட்டது.

சிதம்பரம் ஐயருக்கு எல்லாரோடும் சண்டை.

தலை, கண் தெரியாத கோபம் சுபாவத்திலேயே. கேள்விப்பட்டவரை சுவாரஸ்யம் அவருடைய Person-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/354&oldid=1534627" இலிருந்து மீள்விக்கப்பட்டது