பக்கம்:பாற்கடல்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

349


ality மற்ற உடன்பிறந்தாரை ஓங்கி நின்றதாகத் தெரிகிறது. வாட்ட சாட்டம், செம்மேனி, அவரை எப்பவும் இன்றைய பாஷையில்) சூழ்ந்திருந்த ஜாலராக் கூட்டம், உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் நெருங்கிய பழக்கம். “மிஸ்டர் சிதம்பரம், Alright if I Sign here?) அதிகாரப் பிரயோகத்தில் (நேரிடையாக வழியில்லா விடினும்) ருசி, அவரை ஏதோ முறையில் தனியாக ஒதுக்கிவிட்டது. எல்லா Camp clerkகளுக்கும் அந்த மவுசு உண்டாகிறதா? அதில்தான் அவருடைய தனித்துவம்.

அவருடைய நற்குண சமயங்களில் அவருடைய தாராளங்கள், பரோபகாரங்கள் ஆச்சரியத்துக்குரிய அபரிமிதமானவை என்று தெரிந்தவர் சொல்கின்றனர். லஞ்ச ஊழல் வழக்குகள், தண்டனைகளிலிருந்து எத்தனை சிப்பந்திகளை (பங்கா பதவிக்காரர்கள் உட்பட), இலாகா ரூல் சட்டங்களில் அவருடைய நிபுணத்துவத்தாலும் வாக்குச் சாதுரியத்தினாலும், எல்லாவற்றிற்கும் மேல், ஆங்கிலத்தில் தன் எழுத்து வன்மையினாலும் தப்புவித்திருக்கிறார்! என்ன செய்து என்ன? கடைசியில் கழநீர்ப் பானையில் கைவிட்டு விடுவார். இந்த மனுஷனிடம் ஏண்டாப்பா உபகாரம் பெற்றோம் என்று சலித்துக்கொள்ளும்படிப் பண்ணிவிடுவார். நாக்கில் பாம்பு விஷத்தை அப்படித் தெறிப்பாராம். ‘உங்களைப் போல் உண்டா?’ என்கிற கற்பூர தீபாராதனைப் புகைதான் அவர் மூச்சு, இல்லையேல் –

சிதம்பரத் தாத்தாவும் அவர் தாயாரும்—

அவளை ஏதோ தகாத வார்த்தை பேசிவிட்டார். அப்போதுதான், இலையில் சாதத்துடன் உட்கார்ந்திருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/355&oldid=1534628" இலிருந்து மீள்விக்கப்பட்டது