பக்கம்:பாற்கடல்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

லா. ச. ராமாமிருதம்


கிறாள். சாதம் பிசைந்தாயிற்று. கவளம் இன்னும் வாயுள் போகவில்லை.

“அடே !”

கொள்ளிக் கட்டையிலிருந்து ஜ்வாலை குபீரிட்டது. நுனியில் பொறிகள் பறந்து சரிந்தன.

”அடே !”

அதே வேளையில், இன்னொரு வீட்டில், கிண்டி மூக்கிலிருந்து குழல் ஜலம், பூமியில் தத்தம் சிந்திற்று. அப்போதே, தொலைக்கப்பால், ஜலம் விழுந்த அதே கோட்டில், பூமி வெடித்தது.

எங்கோ, மைதானத்தில் நட்ட நடுவில் நின்ற அரசில் இலைகள் சலசல.

அடே! உன்னைப் பெற்ற வயிறு பற்றி எரிஞ்சு சொல்றேன், உன்னை ஏன் பெற்றேன்னு இருக்குடா !”

எங்கோ, எவனோ, துர்க்கனாவில் குழறல் பயத்தின் சிரிப்பாக வெடித்துச் சில்கள் 'சில்'லென உதிர்ந்தன.

அந்தரம் அதிர்ந்தது.

”அடே! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது!”

”ஓஹ்ஹோ! பத்தினி சாபமாக்கும்! பிறந்தாலோ ?”

”பிறந்தாலும் தக்காது. பாம்பு தன் முட்டையை நக்கிவிடற மாதிரி நக்கிவிடுவாய்!”

மேற்காண்பது, வாசிக்காதவர்களுக்குப் 'புத்ர' நாவல் முதல் பக்கத்திலிருந்து.

இலக்கியம் பண்ணுகிறேன் என்கிற சாக்கில், குடும்ப அழுக்குகளை அம்பலத்தில் கழுவியாகிறது என்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/356&oldid=1534629" இலிருந்து மீள்விக்கப்பட்டது