பக்கம்:பாற்கடல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

லா. ச. ராமாமிருதம்


ஜி. சுப்ரமணிய ஐயருடைய பெண்களில் ஒருத்தி பாவம் - கன்னி விதவையாகி விட்டாள். அவருடைய சமூக சீர்திருத்த ஆர்வம், அத்துடன் நாட்டில் அப்போதுதான் அடிக்க ஆரம்பித்திருக்கும் காந்தி காற்று இரண்டும் சேர்ந்து, ஐயர் எங்கெங்கோ அலைந்து திரிந்து எப்படியோ ஒரு வரனைத் தேடிப்பிடித்து, ஏகமாய்ப் பணத்தைக் கொடுத்து மறு விவாகமும் பண்ணி முடித்தாலும் முடித்தார். பிடித்தது அவருக்குப் பாக்கு.

அக்கரைச் சீமைக்குப் போனாலே பிராயச்சித்தம் கேட்கும் இந்தச் சமுதாயம், அந்த நாளில் விதவா விவாகத்தைப் பொறுக்குமா? ஐயர் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டார். ஐயருக்கு வாக்குக்குக் குறைவா?

செல்வத்துக்குக் குறைவா? அடுத்த பெண்ணுக்கு வரனுக்கு ஊர் ஊராய்த் திரிகிறார். சல்லடை போட்டுச் சலிக்கிறார். சீந்துவார் யாருமில்லை. தனக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று ஐயர் எதிர்பார்த்திருக்க மாட்டாரோ என்னவோ? நாளாக ஆக, அவர்லால் குடிக்கு வந்தபோது சலித்துப் போனதல்லாமல், மிரண்டும் போயிருப்பார் என நினைக்க வேண்டியிருக்கிறது.

இந்த இக்கட்டுக்களைத் தீர்க்க மத்யஸ்தர் இதற்கென்றே திரிந்துகொண்டிருப்பாரே! அமிர்தமய்யர் குடும்பமும் ஐயரும் இடை ஆள்மூலம் அறிமுகமாகி, ஜகதீசனுக்கு இன்னும் கலியாணமாகாததும், இரு குடும்பங்களின் விவகாரங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஐயருடன் சம்பந்தம் செய்வதால் இந்தக் குடும்பமும் சாதிவிலக்காவது பற்றி, இந்தக் குடும்பம் கவலைப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/36&oldid=1533008" இலிருந்து மீள்விக்கப்பட்டது