பக்கம்:பாற்கடல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

35


”உஷ் - தாரையைப் பதிவிரதை லிஸ்டில் சேர்த் திருக்குடா !”

”ராமன் கேஸ் மட்டும் என்ன, ஓயாமல் சீதைக்கு அழுதுண்டு! அவனை அவனுக்கு அப்பப்போ ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு!” “சீதை என்ன லேசுப்பட்டவளா? கிழிச்ச கோட்டைத் தாண்டியவள்தானே! லசுஷ்மணனை என்ன மட்டமாய்ப் பேசியிருக்கிறாள்! வலைச்சி தோற்றாள்!”

“உஷ் - சிதம்பரம்!”

"என் இஷ்டம், பேசுவேன். நீ யார் கேட்க?"

"ஆமாண்டாப்பா, நீ போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆச்சே! உன்னை யார் கேட்பது?”

"லக்ஷ்மணன் ஒரு ஏமாளிடா! என்ன சுகத்தைக் கண்டான்?”

"தலைவிதி யாரை விட்டது?”

“ராவணனும்தான்! வரம் கேட்கும்போது நரனை விட்டதுதானே அவன் நாசத்துக்குக் காரணமாச்சு”

"நாசத்துக்குக் காரணம் சீதை. சீதை பிறக்க லங்கை அழிய !"

"அவள் லங்கிணிடா, அவளால் ராமன் மட்டும் சுகப்பட்டானா?”

"ராவணன் சுகப்பட்டானா ?”

'கஷ்டத்தைக் கொண்டுவருவதே அவள் ராசி"

"தெரிஞ்சு தான் ஜனகன் கலியாணத்தோடு அவளைக் கை கழுவிவிட்டான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/41&oldid=1533014" இலிருந்து மீள்விக்கப்பட்டது