பக்கம்:பாற்கடல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

லா. ச. ராமாமிருதம்


தறார் பார். இந்திரஜித் ஸம்காரம்தான் ராவண ஸம்காரத்தைவிடப் பெரிசுன்னு!”

”நியாயங்களின் பங்குகள் அன்றிலிருந்து இன்று வரை மூடு சூளைதான். என்னவோ ஒரு ஒரு நாளா கழியறது. எப்படியோ கழியறது. அது ஒண்ணுதான் உண்மை. மற்றவையெல்லாம் புளுகு”

"ராமண்ணா நோட்புக்கே கதின்னு இருக்காப் போல.”

”பூர்வஜன்மத்தில் குசேலனாயிருந்திருப்பானோ? அவர் கிருஷ்ணா கிருஷ்ணான்னுண்டு இருந்தாரே!” புர்வஜன்மமென்ன, குசேலோபாக்யானம் இப்பவும் தான் தொடர்கிறது. ரூபாய்க்கு எட்டுப் படி அரிசி - கொல்லையில் தானாய் முளைத்த கீரை. ஆனால் பலவந்த உபவாசங்கள் அப்பப்போ குடும்பத்தில் நேர்ந்துகொண்டிருக்கும்.

தாத்தாவுக்குச் சம்பளம் பதினைந்து ரூபாய். குடும்பம் ஏற்கெனவே பெரிசு. ஐயா, தனக்குக் கட்டினவள் இறந்ததும், குழந்தைகளுடன் அண்ணா வீட்டுக்கு வந்து தங்கிவிட்டார். மறுமணம் செய்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் காளை வயது.

இந்தக் குடும்பமும் சிறியதல்ல. மூன்று பிள்ளைகள். இரண்டு பெண்கள். தவிர ஸ்ரீமதி தன் மூன்று குழந்தைகளுடன் சீக்கிரமே அண்ணாவாத்துக்கு வந்துவிட்டாள்.

தம்பிமார் குழந்தைகள் இங்குதான் பிரசவம். ஒழுங்கையறைக்கு கர்ப்பக்ரஹம் என்ற பெயர். தன் இருட்டுக்கும் அது வருடத்தில் சராசரி பாதி வேளைக்கேனும் படும் பயனுக்கு முற்றும் தகும். மிச்சக் காலத்துக்கு அங்குதான் பழையது மூலை, சிவப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/44&oldid=1533018" இலிருந்து மீள்விக்கப்பட்டது