பக்கம்:பாற்கடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

39


எறும்பு, பிள்ளையார் எறுப்பு, கட்டெறும்பு, சாதத்தில் கண்டு குழந்தைகள் முனகினால் மன்னி ரெடியாக பதில் வைத்திருப்பாள்: "இரட்டைக் கடுகு, இரட்டை மிளகு" தப்பி விழுந்திருக்கும். அப்படியே எறும்பைத் தின்னாலும் கண்ணுக்குக் குளுமை. எண்ணாயிரம் வயசு, படிக்கிற பையன்களுக்கு நாக்கைப் பாரு. சோற்றைப் பழித்தால் நாளைக்கு இதுவும் கிடைக்காது. முன்பிடிக்குப் பின் பிடி கப்பிட்டு எழுந்து பள்ளிக் கூடத்துக்கு ஒடற வழியைப் பாருங்கடா!”

ஒருநாள் கிழமை, திவசம், திங்கள் என்று குடும்பத்துடன் தம்பிமார்கள் நான்கு நாள் முன்னதாகவே வந்து உட்கார்ந்துவிட்டால் கேட்க வேண்டாம். அந்தக் காலத்தில் மலைகளுக்குச் சிறகு இருந்ததாம். பறந்து வந்து பட்டணங்கள் மேல் இறங்கி உட்கார்ந்துவிடுமாம். ”அண்ணா! அண்ணா !” என்று உயிரை விடுவது வார்த்தையோடு சரி. அண்ணா என்ன பண்ணுவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்.

தாத்தா - தப்பு அப்பா எப்படி - சமாளித்தார்? நோட்புக்கில் மணிமணியான எழுத்தில் நிரப்பிக் கொண்டிருப்பார். அவர் காதில் எதுவும் விழாது. போடவும் பாட்டிக்கு தைரியம் கிடையாது. பெருந்திருவே துணை.

தாத்தாவுக்கு கம்பீர சாரீரம், கேட்ட பாக்கியம் எனக்கு உண்டு.

”தாராமல் இருப்பாளோ? அவள் என்ன சத்தியம் மறந்தவளோ ?”

அவர் பாட்டை அவர் பாடுகையில் அந்த வெண்கலநாதம் இப்பவும் செவியில் ஒலிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/45&oldid=1533019" இலிருந்து மீள்விக்கப்பட்டது