பக்கம்:பாற்கடல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

லா. ச. ராமாமிருதம்


அந்த ஒரு பொய்.

கட்டம் பரபரப்பாய்த்தானிருக்கிறது. மசிந்து விடுவாரோ? ஜெயிப்பு அவருடையதுதானா?

'அரிச்சந்திரா அரிச்சந்திரா! எங்களைக் கைவிட்டுடாதே!

இந்தப் புதுக்குரல்கள் எங்கிருந்து? அரிச்சந்திரன் திகைக்கிறான்.

"நீங்கள் யார்?"

"அரிச்சந்திரா! நாங்கள் உன் பிதுர்க்களடா! எங்களைக் கைவிட்டுடாதே! இப்போ சறுக்கினையோ, உன் ஒரு பிழையால், இந்தக் குலபதியைத் தொட்டு வழிவழியாகக் கரையேறியிருக்கும் அத்தனைபேரும் மீளா நரகத்துக்குத் தள்ளப்படுவோம். அடே, குழந்தே! எங்களைக் கைவிட்டுடாதே!”

கிடக்கையில் என் உடல் கட்டையாக விறைத்து விட்டது. தொண்டையை அடைத்தது. ‘நான்’ - நான் - என்னிலிருந்து ஒரு 'நான் புறப்பட்டு விம்மிக் கொண்டே.

பால்ரோசம். உள்ளூர அமைதியான ஒரு சீறல் சப்தம் ஓர் ஆக்ரோஷத்தின் படமெடுப்பு. இன்னும் விம்மிக்கொண்டே.

இந்த விம்மல் ’நான்’ என்னுடைய நான்தான். என்னின்று வந்த நான். நானும் இதைச் சேர்ந்தவன் தான். ஆனால் நான் இதனுள் அடங்கியவன். இது நானின் விசுவரூபம் தணலிலிருந்து சுழித்துக்கொண்டே

மேலெழும்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/60&oldid=1533291" இலிருந்து மீள்விக்கப்பட்டது