பக்கம்:பாற்கடல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

57


—இதை நான் வாஸனை என்கிறேன்.

இன்றைய குடும்ப வாழ்க்கையில் இந்த மணம் மறந்து போய்க் கொண்டிருப்பதுதான் என் கொடிய வேதனை.

'சுஜி இந்த வருஷம் காலேஜ் போறாள்னு அவளுக்கு அவாத்துலே நைலக்ஸ் தாவணி நாலு வாங்கியிருக்கா பாரு! கண்ணைப் பறிக்கிறது. தவிர ஷெர்வாணி கம்மீஸ், நாமும் இருக்கோம்!”

“தெரியுமோன்னோ? இல்லே இல்லேன்னு சொல்லிண்டு கடைசியில் அவாத்திலும் - டிவி வாங்கியாச்சு. அடுத்த மாஸம் - ஃப்ரிஜ்"

“நாலு பையன்களும் சம்பாதிக்கிறான்கள். சேத்து வெச்சுக்கறான்கள். அல்பம் மாதிரி அவர் அப்பா, அவர்கள் சம்பளத்துக்குப் பங்குக்கு வரதில்லை. கணக்கும் கேட்பதில்லை. பிறத்தியாரிடமிருந்து நாம் கற்றுக்க வேண்டியது எவ்வளவோயிருக்கு”

மேலே இரைந்து கிடக்கும் நட்சத்திரங்களில், என் மூதாதையர் அப்பா அம்மாவுடன் என்று போய் நானும் சேர்வேன்?

"அவாளைக் கவனிச்சையோ ? முகத்தில் ஒரு பணக்காரக் களையிருக்கு!”

அப்போ பணக்காரா வேறே, பணக்காரக் களை வேறேயாக்கும்!

இரண்டும் வெவ்வேறாய் சொல்பவர்களுக்கே தெரிகிறது போலும்!

"நம்மைவிடப் பச்சையாக எதிர்வீட்டில் வாழ்கிறார்கள் என்பதைச் சொல்லியே தீருவேன்; பொறாமைப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/63&oldid=1533293" இலிருந்து மீள்விக்கப்பட்டது