பக்கம்:பாற்கடல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

லா. ச. ராமாமிருதம்


குழிமேலாய். இடுப்பில் நிஜார். கையில் சாட்டை. மார்பில் சந்தன வாசனை. மேட்டுவிழிகள் பொறி பறந்தன.

“வழி தப்பிப் போச்சு அப்பா !”

”நேர் வழிவிட்டு உம்மை யார் குறுக்கே திரும்பச் சொன்னது? கள்ளர் பயம் பேச்சு நடமாடறது தெரியுமல்ல?”

“தெரியுமப்பா !”

”சரி என் பின்னாலேயே வாங்க”

நிமிஷமாக பழக்கமான பாதை வந்துவிட்டது. ஒரு பத்து கஜ தூரத்துக்கு முன்னால் ‘லொடக் லொடக்’ இரட்டை மாட்டு வண்டி

”இனி, போவீரா? வழி தெரியுமா ?”

“தெரிஞ்சதப்பா. நீ நன்னாயிருப்பே !”

”இனி இப்படியெல்லாம் குறுக்கில் இறங்காதீங்க. உமக்கு அது தேவையில்லை!”

திருப்பத்தில் ஆள் மறைந்துவிட்டான். அவன் சென்ற திக்கிலிருந்து ஜல் ஜல் கால் சிலம்போசை, அடுத்துக் குதிரையின் குளம்புச் சத்தம்.

எட்ட எட்ட எ.ட்...ட...

தாத்தா வார்த்தைகளில், வந்த ஆளைப் பார்ப்போம்.


”தலைப்பாகும், சீறாவும் தாரும் தடம் தோள்
   சிலைப் பாரமும் கைச் சமுதாடும்
நினைத்த கழற் காலன்.
   நினைத்த விடம் காணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/68&oldid=1533297" இலிருந்து மீள்விக்கப்பட்டது